Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாளை காமன்வெல்த் கடைசி நாள்: இந்தியாவுக்கு பதக்க வேட்டை காத்திருக்கு

கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியில் 10 நாட்களில் இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம் என, 59 பதக்கங்களை குவித்துள்ளது. இந்த நிலையில் போட்டியின் கடைசி நாளான நாளை, 2 தங்கம் உள்பட 8 பதக்கங்கள் கிடைப்பது உறதியாகி உள்ளது.

மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும், 21வது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கிறது. இம்மாதம் 4ம் தேதி துவங்கிய இந்த விளையாட்டுப் போட்டிகள் நாளையுடன் முடிவடைகின்றன. இதில் 10வது நாளான இன்று, இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம் என, 59 பதக்கங்களை குவித்துள்ளது. அட்சய திருதியை நாளான இன்று மட்டும் இந்தியா 8 தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்றது.

India assured of 8 medals in the final day of CWG

நாளையுடன் போட்டி முடிவுக்கு வருகிறது. துவக்க விழாவில் பேட்மின்டன் விராங்கனை பிவி சிந்து இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்றார். நாளை நடக்கும் நிறைவு விழாவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளார்.

கடைசி நாளான நாளை நடக்கும் போட்டிகளில், இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 8 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. பாட்மின்டன் மகளிர் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் பிவி சிந்துவுடன் சாய்னா நெஹ்வால் மோத உள்ளார். அதனால், ஒரு தங்கம், ஒரு வெள்ளி உறுதியாகி உள்ளது.

பாட்மின்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு பைனலில், சமீபத்தில் உலகத் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த ஸ்ரீகாந்த் கிடாம்பி, மலேசிய வீரார் லீ சாங் வீயை சந்திக்கிறார். அதனால், இந்தப் பிரிவிலும் ஒரு பதக்கம் உறுதி.

ஆடவர் இரட்டையர் பிரிவின் பைனலில் இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி, சிராக் சந்திரசேகர் ரெட்டி ரோட்டி இங்கிலாந்தின் மார்கஸ் எல்லிஸ், கிறிஸ் லான்கிரிட்ஜ் ஜோடியுடன் மோத உள்ளது. இதிலும் ஒரு பதக்கம் உறுதி.

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையரில் வெள்ளி வென்ற தீபிகா பலிகல், ஜோஸ்னா சின்னப்பா உடன் ஜோடி சேர்தந்து மகளிர் இரட்டையர் பிரிவு பைனலில் பங்கேற்கிறார். அதனால், இந்தியாவுக்கும், தீபிகாவுக்கும் மற்றொரு பதக்கமும் உறுதியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரரும், ஐபிஎல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனுமான தினேஷ் கார்த்திக்கின் மனைவிதான் தீபிகா பலிகல் என்பது குறிப்பிடத்தக்கது.

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு பைனல்ஸில் இரண்டு இந்திய ஜோடிகள் மோதுகின்றன. மவுமா தாஸ், அசந்தா சரத் கமல் ஜோடியும், மணிகா பத்ரா, தமிழரான சத்யன் ஞானசேகரன் ஜோடி மோதுகின்றன. அதனால், தங்கம் மற்றும் வெள்ளி இந்தியாவுக்கு உறுதி.

இதைத் தவிர டேபிள் டென்னிசில் ஆடவர் ஒற்றையர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் அசந்தா சரத் கமல், இங்கிலாந்தின் சாமுவேல் வால்கருடன் மோத உள்ளார்,.

Story first published: Saturday, April 14, 2018, 22:49 [IST]
Other articles published on Apr 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+