காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் 15 தங்கம் உட்பட 33 பதக்கங்களை அள்ளிய இந்தியா
கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் நேற்று, இந்திய வீரர்கள் 15 தங்கம் உட்பட 33 பதக்கங்களை பெற்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரில் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய தரப்பில் ஷயா தேவி (53 கிலோ-சீனியர்), பிரமிளா கிறிசானி(53 கிலோ-யூத்), மாட்சா சந்தோஷி (53 கிலோ-ஜூனியர்) ஆகியோர் பெண்கள் பிரிவில் தங்கம் வென்றனர்.
ஆண்கள் பிரிவில் அஜித் சிங் (50 கிலோ- யூத்) அபூர்பா சேடியா (56 கிலோ- யூத்) ஆகியோரும் தங்கம் வென்றனர். நேற்றைய போட்டியில் இந்தியாவிற்கு 15 தங்கம், 12 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்கள் கிடைத்தது. முன்னதாக முதல் நாள் போட்டிகளில், இந்தியாவிற்கு 6 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 15 பதக்கங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:51 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications