ஆசிய விளையாட்டு: ஒரே போட்டியில் 2 பதக்கம்.. சவுரப் சவுத்ரி தங்கம், அபிஷேக் வர்மா வெண்கலம்!
ஜகார்த்தா : ஆசிய விளையாட்டு போட்டிகளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில், இந்தியாவை சேர்ந்த பதினாறு வயது சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார். அதே போட்டியில் அபிஷேக் வர்மா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பதினாறு வயது இளம் வீரரான சவுரப் சவுத்ரி 240.7 புள்ளிகள் பெற்று ரெக்கார்ட் படைத்ததோடு, முதல் இடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார்.

இதே இறுதியில், பங்கேற்ற அபிஷேக் வர்மா நான்காம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார். ஒரே போட்டியில் இரண்டு பதக்கம் கிடைத்ததால் இந்தியாவின் பதக்க பட்டியல் மேலும் உயர்ந்துள்ளது.
இது வரை, இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளது. இதில் ஐந்து பதக்கங்கள் துப்பாக்கி சுடுதல் மூலம் மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற இரண்டு மல்யுத்தத்தில் கிடைத்தது.
இன்று மேலும் பல இந்திய வீரர்கள் இறுதிப் போட்டிகளில் ஆட உள்ளனர். எனவே, இன்னும் பதக்கங்கள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications