Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீனா மாதிரி ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வெல்ல வேண்டுமா.. ஜஸ்ட் ரூ.4224 கோடிதான் செலவு!

டெல்லி: ரியோ ஒலிம்பிக்கில் ஆடி முடிந்து ஆவணி பிறந்ததும், இந்தியா முதல் பதக்கத்தை வென்றுள்ளது. மல்யுத்த வீராங்கனை, சாக்ஷி மாலிக் வெண்கல பதக்கம் தேடி தந்துள்ளார். இப்போது பி.வி.சிந்து மட்டுமே இந்தியாவின் ஒரே மெடல் நம்பிக்கையாக எஞ்சியுள்ளார்.

1980 மாஸ்கோ ஒலிம்பிக் முதல் இதுவரை இந்தியா வெற்றி பெற்ற பதக்கங்கள் எண்ணிக்கை 14 மட்டுமே. அதாவது 8.92 கோடி இந்தியர்களுக்கு 1 பதக்கம் என்ற சராசரி இது.

India can get you 10 medals in 2020 if you spend Rs 480 crore

இந்த அவல நிலையை பிரதமர் மோடி நினைத்தால் மாற்ற முடியும் என்கிறார்கள், விளையாட்டு துறை நிபுணர்கள். தொழில்துறைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை போலவே, விளையாட்டு துறைக்கு மோடி முக்கியத்துவம் அளித்தால், அது நிச்சம் கேம் சேஞ்சராக மாறும் என்பது அவர்கள் வாதம்.

இந்திய துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா கணக்குப்படி இந்திய வீரர் ஒருவர் பதக்கத்தை வெல்ல சராசரியாக 5.5 மில்லியன் பவுண்ட் செலவிட வேண்டுமாம். இந்திய கணக்குப்படி இதன் மதிப்பு, ரூ.48 கோடி. (இந்த ரேட்டுக்கு காசியப்பன் பாத்திரக்கடையையே வாங்கிவிடலாம் என நீங்கள் நினைப்பது புரிகிறது).

2012 லண்டன் ஒலிம்பிக்கில் சீனா 88 பதக்கங்களை வென்றது. இந்தியா அப்போது 6 பதக்கங்கள் வென்றது. இதுவரை ஒரு ஒலிம்பிக்கில் இந்தியாவின் பெஸ்ட் ஆட்டம் இதுதான். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் நாம் சீனாவை சமன் செய்ய வேண்டுமானால், அதற்கு ரூ.4224 கோடியை வாரி இறைக்க வேண்டியது கட்டாயம் என்கிறது 'தி இக்கனாமிக்ஸ் டைம்ஸ்'

இவ்வளவு அதிக தொகை செலவிட்டு பதக்கம் வெல்ல வேண்டுமா என நினைக்கிறீர்களா? 2015-16ல் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு ரூ.567 கோடியை ஒப்பிட்டால், விளையாட்டு துறைக்கும் முக்கியத்துவம் தருவதில் தப்பில்லையே.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லுவது ஒரு நாட்டின் வளர்ச்சியை உலக அரங்கத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும் என்கிறார் கோடக் மகிந்திரா வங்கியின் துணை தலைவர் உதய் கோடக். அமெரிக்கா, சீனா போன்றவை ஒலிம்பிக்கில் சாதிப்பதை, அவற்றின் பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிடுகிறார் அவர்.

Story first published: Thursday, August 18, 2016, 16:25 [IST]
Other articles published on Aug 18, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+