Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியை சாதாரணமாக எடை போடாதீர்கள்... கிரேக் சேப்பல் எச்சரிக்கை!

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியை குறைத்து எடை போட்டுவிட முடியாது என்று ஆஸ்திரேலிய மாஜி வீரரும், இந்திய முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.

சேப்பல் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் கங்குலியுடன் அவர் கடைபிடித்த மோதல் போக்கால் பிரபலமானார். ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா தொடர்ந்து தோல்வியை தழுவிய நிலையில், உலக கோப்பையில் அவ்வாறு இந்தியா மெத்தனமாக இருக்காது என்று சேப்பல் எச்சரித்துள்ளார்.

உலக கோப்பையில் அதுக்கும் மேல..

உலக கோப்பையில் அதுக்கும் மேல..

இதுகுறித்து சேப்பல் அளித்துள்ள பேட்டி: இந்தியாவை எப்போதுமே குறைத்து எடை போட்டுவிட முடியாது. ஆஸ்திரேலியாவில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சிறப்பாக செயல்பட முடியாமல் போயிருக்கலாம். ஆனால், உலக கோப்பை என்று எடுத்துக் கொண்டால், அவர்கள் வேறு ஒரு அணியாக மாறியிருப்பார்கள்.

நான் சுயநலவாதி

நான் சுயநலவாதி

நான் சுயநலவாதிதான். எனக்கு ஆஸ்திரேலியா வெல்ல வேண்டும் என்பதுதான் ஆசை. இந்த உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான வாய்ப்பு உள்ளது. மற்ற எந்த ஒரு அணியைவிடவும் ஆஸ்திரேலியா நன்கு தயாராக உள்ளது.

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து

தென் ஆப்பிரிக்காவும் உலக கோப்பைக்கு நன்கு தயாராகியுள்ளது. நியூசிலாந்தும் சிறப்பான அணியாகவே தெரிகிறது. உள்ளூரில் விளையாடுவது நியூசிலாந்துக்கு கூடுதல் பலமாகும்.

பாகிஸ்தான், மே.இ.தீவுகளும் லேசுபட்டதில்லை

பாகிஸ்தான், மே.இ.தீவுகளும் லேசுபட்டதில்லை

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் பெரிதாக விளம்பரப்படுத்தப்படவில்லை. ஆனால் அவற்றையும் லேசாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் இரு அணிகளிலுமே நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவ்வாறு சேப்பல் தெரிவித்தார்.

Story first published: Wednesday, February 11, 2015, 19:49 [IST]
Other articles published on Feb 11, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+