Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பையை இந்தியா 2வது முறையாக வெல்ல முடியும்: வெங்சர்கார்

லக்னோ: கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நிறைய திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் உலகக் கோப்பையை இந்தியா இரண்டாவது முறையாக வெல்ல முடியும் என்று முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்கார் தெரிவித்தார்.

அவர் உத்தர பிரதேசத்தில் பார்வையற்றவர்களுக்கான மாநில அளவு கிரிக்கெட் போட்டியைத் துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அவர்கள் கடந்த 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்றது போல மீண்டும் வெல்ல முடியும்.

உலகக் கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியில் உள்ள வீரர்கள் திறமையாக ஆடக்கூடியவர்கள் என்றார்.

கிரிக்கெட் உலகக் கோப்பை வரும் 19-ம் தேதி துவங்குகிறது. உத்தர பிரதேசத்தில் திறமையான கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். ஆனால் போதிய வசதிகள் தான் இல்லை. அடிப்படைத் தேவைகளைப் பொறுத்தவரை டெல்லி, மும்பைக்கு அடுத்த இடத்தில் தான் உபி உள்ளது என்றார்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+