இந்தியாவுக்கு வருகிறது பார்முலா-1 கார்ப் பந்தயம்

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் இப்போட்டி நடைபெறும். அடுத்த ஆண்டுக்கான பார்முலா-1 கார்ப் பந்தய அட்டவணையை இறுதிசெய்யும் நிகழ்ச்சி நேற்றுநடைபெற்றது. மொத்தம் 20சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் முதல் போட்டி பஹ்ரைனில் மார்ச் 13ம் தேதி நடைபெறும். இந்தியாவில் 18வது சுற்றுப் போட்டி அக்டோபர் 30ம் தேதி தொடங்கும்.
டெல்லி அருகே உள்ள நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள ஜேபி குரூப் சர்க்யூட்டில் இந்த போட்டி நடைபெறும். இதையடுத்து அங்குள்ள சுற்றுப் பாதை நவீனமயமாக்கபப்டுவுள்ளது.
இந்தியாவுக்கு பார்முலா-1 கார்ப் பந்தயம் வருவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியக் கார்ப்பந்தய வீரர்கள் நரேன் கார்த்திகேயன் தலைமையில் சர்வதே அளவில் சாதனைகளைப் படைத்துவரும் நிலையில் இந்தியாவுக்கு பார்முலா 1 வருவது கார்ப் பந்தய விளையாட்டுக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications