Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து இந்தியா இமாலய வெற்றி!

மிர்பூர்: வங்கதேசத்தில் நடைபெற்று வரும் 20 ஒவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் குரூப் 2 பிரிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நேற்று. இந்தியா ஏற்கனவே அரைஇறுதி சுற்றை எட்டிவிட்டது. ஆஸ்திரேலியா அந்த வாய்ப்பை பறிகொடுத்து விட்டது.

இந்திய அணியிலும் ஆஸ்திரேலிய அணியிலும் நேற்று சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

தவான், ஷமி இல்லை..

தவான், ஷமி இல்லை..

இந்திய அணியில் ஷிகர் தவான், முகமது ஷமி இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக ரஹானே, மொகித் ஷர்மா சேர்க்கப்பட்டிருந்தனர்.

ஆஸி. அணியில் ஒயிட்

ஆஸி. அணியில் ஒயிட்

அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் ஜேம்ஸ் பவுல்க்னெர் நீக்கப்பட்டு, கேமரூன் ஒயிட் சேர்க்கப்பட்டார்.

டாஸ் இழந்த டோணி

டாஸ் இழந்த டோணி

இந்த தொடரில் முதல் முறையாக இந்திய கேப்டன் டோணி நேற்று டாஸை இழந்தார். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பெய்லி இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.

சோபிக்காத ரோகித் ஷர்மா

சோபிக்காத ரோகித் ஷர்மா

ரஹானேவும், ரோகித் ஷர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆட வந்தனர். பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய ரோகித் ஷர்மா 4 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு அவுட் ஆனார்.

அடுத்து களம் இறங்கி அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்டார் விராத் கோஹ்லி. அவர் 23 ரன்களை எடுத்தார். ரஹானே 19 ரன்களை எடுத்தார்.

தத்தளித்த இந்தியா

தத்தளித்த இந்தியா

சுரேஷ் ரெய்னா 6 ரன்களிலே அவுட் ஆக இந்திய அணி 66 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. பின்னர் வந்த யுவராஜ்சிங்தான் அணியை தூக்கி நிறுத்தினார்.

யுவராஜ் அபாரம்

யுவராஜ் அபாரம்

யுவராஜ்சிங்கும் டோணியும் கை கோர்த்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி நிம்மதிப் பெருமூச்சுவிட்டது. ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் முயர்ஹெட்டின் ஒரே ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை அடித்து யுவராஜ்சிங் அசத்தினார்.

யுவராஜ்சிங் அரைசதம்

யுவராஜ்சிங் அரைசதம்

தனது ஆட்டத்தின் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் யுவராஜ்சிங் 8-வது அரைசதத்தை கடந்தார்.

159 ரன்கள்..

159 ரன்கள்..

இருப்பினும் கடைசி ஓவர்களில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுக்க 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

சுருண்ட ஆஸி.

சுருண்ட ஆஸி.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய வீரர்களால் இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை. தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், எதிரணி வீரர்களை மிரள வைத்தார்.

86 ரன்களே..

86 ரன்களே..

தொடக்கம் முதல் கடைசி வரை போராடிப் பார்த்த ஆஸ்திரேலியா இறுதியில் 16.2 ஓவர்களில் 86 ரன்களில் முடங்கியது. இதனால் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

அஸ்வினுக்கு 4 விக்கெட்டுகள்

அஸ்வினுக்கு 4 விக்கெட்டுகள்

4 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அஸ்வின் ஒரு இன்னிங்சில் 4 விக்கெட் எடுப்பது இதுவே முதல் முறையாகும். நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு இது 4-வது வெற்றியாகும்.

Story first published: Monday, March 31, 2014, 10:17 [IST]
Other articles published on Mar 31, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+