Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானை வச்சு செய்த இந்தியா!

டாக்கா: ஆசியக் கோப்பை ஹாக்கியின் சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு இந்தியா நுழைந்தது. இன்று இரவு நடக்கும் இறுதிப் போட்டியில் மலேசியாவை வென்றது.

ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிகள் வங்கதேசத்தில் நடந்து வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் சூப்பர் 4 பிரிவில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.

இந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத இந்தியா, டிரா செய்தாலே பைனலுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் பாகிஸ்தானை சந்தித்தது.

தடுப்பாட்டத்தில் இந்திய வீரர்கள்

தடுப்பாட்டத்தில் இந்திய வீரர்கள்

ஆட்டத்தில் முதல் பாதியில் பெரும்பாலான நேரம் பந்து பாகிஸ்தான் அணியிடமே இருந்தது. இந்திய வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு கோல் அடிக்க விடாமல் பார்த்து கொண்டிருந்தனர். முதல் பாதியின் முடிவில் இரு அணிகளுமே கோல் ஏதும் அடிக்கவில்லை.

தொடர்ந்து நான்கு கோல்கள்

தொடர்ந்து நான்கு கோல்கள்

இரண்டாவது பாதியிலும் நீண்ட நேரம் கோல் ஏதும் விழவில்லை. இந்த நிலையில், 39வது நிமிடத்தில் சபிர் சிங் முதல் கோலை அடித்தார். அதன்பிறகு ஹர்மன்பிரீத் சிங் 51வது நிமிடம், லலித் உபாத்யாய் 52வது நிமிடம், குர்ஜந்த் சிங் 57வது நிமிடம் என, மாறி மாறி கோலடிக்க, 4-0 என இந்தியா வென்றது.

4வது முறையாக பாக்.குக்கு தோல்வி

4வது முறையாக பாக்.குக்கு தோல்வி

இதன் மூலம் ஏழுவது முறையாக ஆசியக் கோப்பை இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. இந்த ஆண்டில் நான்காவது முறையாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா வென்றுள்ளது.

மலேசியாவும் நுழைந்தது

மலேசியாவும் நுழைந்தது

நேற்று நடந்த மற்றொரு சூப்பர் 4 பிரிவு ஆட்டத்தில் தென் கொரியா - மலேசியா 1-1 என டிரா செய்தன. புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததால் மலேசியா, பைனலுக்கு முன்னேறியது.

2018 உலகக் கோப்பைக்கு தகுதி

2018 உலகக் கோப்பைக்கு தகுதி

ஆசியக் கோப்பையை வெல்லும் அணி, அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை ஹாக்கிக்கு தகுதி பெறும். இந்தியா, மலேசியா, பாகிஸ்தான் ஆகியவை ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. இன்று நடக்கும் பைனலில் இந்தியா - மலேசியா மோதுகின்றன. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் தென்கொரியா- பாகிஸ்தான் மோதுகின்றன.

Story first published: Sunday, October 22, 2017, 14:02 [IST]
Other articles published on Oct 22, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+