ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு முதல் பதக்கம்….துப்பாக்கி சுடுதலில் அசத்தல்
ஜகார்தா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. இன்று நடந்த 10 மீட்டர் கலப்பு ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற ரவி குமார், அபுர்வி சன்டேலா வெண்கலம் வென்று உள்ளனர்.
ரவி குமார், அபுர்வி சன்டேலா இருவரும் இணைந்து 429.9 புள்ளிகள் பெற்று 10 மீட்டர் கலப்பு ஏர் ரைபிள் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர். முதல் இடத்தை சீன தைபெய் அணி 494.1 புள்ளிகளுடன் பெற்று தங்கப் பதக்கத்தையும், சீனா 492.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இதன் மூலம் இந்தியாவுக்கு 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் பதக்கம் கிடைத்துள்ளது. இன்று மேலும் பல போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, இன்று மேலும் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
10 மீட்டர் கலப்பு ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பாக பங்கேற்ற மானு பாகர் மற்றும் அபிஷேக் வர்மா இருவரும் இறுதிச் சுற்றுக்கு செல்ல தவறினர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018


Click it and Unblock the Notifications