Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை கால்பந்து – இந்தியாவுக்கு சான்ஸ் எப்படி?

டெல்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிபா 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டி நாளை துவங்க உள்ளது. 24 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமான கால்பந்துக்கு இந்தியாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். மேற்கு வங்கம், கோவா, கேரளா போன்ற மாநிலங்களில் கால்பந்து மிகவும் பிரபலம்.

முதல் முறையாக உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது, முதல் முறையாக இந்தியா பங்கேற்கிறது என்பது, இந்திய விளையாட்டு துறைக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய பெருமையாகும்.

பயில்வான் அணிகளுடன் மோதல்

பயில்வான் அணிகளுடன் மோதல்

இந்த உலகக் கோப்பையில் மிகவும் வலுவான அமெரிக்கா, கொலம்பியா, கானா ஆகியவை இடம்பெற்றுள்ள ஏ பிரிவில் இந்தியாவும் உள்ளது. இதில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது.

மிகப் பெரிய வாய்ப்பு

மிகப் பெரிய வாய்ப்பு

அதே நேரத்தில், இந்த உலகக் கோப்பை மிகப் பெரிய வாய்ப்பை நமக்கு உருவாக்கி தந்துள்ளது. பீலே முதல், மெஸ்ஸி, ரொனால்டோ என எந்த வீரரும் திடீரென வந்துவிடவில்லை. சிறுவயது முதலே பல்வேறு போட்டிகளில் பங்கேற்று திறமையை மேம்படுத்திக் கொண்டு, அதை வெளிப்படுத்தினர்.

இந்தியாவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு

இந்தியாவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு

அந்த வகையில், 17 வயதுக்குட்பட்டோருக்கான இந்த உலகக் கோப்பை, இந்தியாவில் கால்பந்துக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கும். உடனடியாக இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கலாம். தற்போது போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில்தான் நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

பயணச் செலவுக்கு காசில்லாமல் கஷ்டம்

பயணச் செலவுக்கு காசில்லாமல் கஷ்டம்

முதல் முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பு, 1950ல் இந்தியாவுக்கு கிடைத்தது. ஆனால், பயணச் செலவுக்கு பணமில்லாததால், பிரேசிலில் நடந்த உலகக் கோப்பையில் இந்தியா பங்கேற்க முடியவில்லை என்ற சோகக் கதை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவுக்குக் கிடைத்த நல்ல சான்ஸ்

இந்தியாவுக்குக் கிடைத்த நல்ல சான்ஸ்

அந்த உலகக் கோப்பையில் இருந்து பல்வேறு நாடுகள் விலகி கொள்ள, ஆசியாவில் இருந்து இந்தியாவை இந்தப் போட்டியில் பங்கேற்க வரும்படி பிபா அழைத்திருந்தது. முதலில் கெய்ரோவில் இருந்து பயணச் செலவை ஏற்பதாக பிபா கூறியது. பின்னர் கோரிக்கையை ஏற்று, கோல்கத்தாவில் இருந்து, பிரேசிலுக்கு செல்வதற்கான டிக்கெட் செலவை ஏற்பதாக கூறியது.

பணப் பிரச்சினையால் விளையாட முடியாத நிலை

பணப் பிரச்சினையால் விளையாட முடியாத நிலை

1948 லண்டன் ஒலிம்பிக் உள்பட பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ள இந்திய அணிக்கு, கைசெலவுக்கு பணமில்லை. அதனால் அந்த உலகக் கோப்பை போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

விளையாட்டு வளருவதற்கு நல்ல வாய்ப்பு

விளையாட்டு வளருவதற்கு நல்ல வாய்ப்பு

ஆனால், தற்போது உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நிலைக்கு உயர்ந்துள்ளோம். இந்த உலகக் கோப்பையில் பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லாவிட்டாலும், கால்பந்து விளையாட்டு இந்தியாவில் வளருவதற்கு மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், அடுத்தடுத்து பல்வேறு சர்வதேச போட்டிகளை நடத்தும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கும்.

Story first published: Thursday, October 5, 2017, 14:01 [IST]
Other articles published on Oct 5, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+