For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டு வரலாற்றில் தேய்ந்து வரும் இந்தியா...புள்ளிவிவரம் சொல்வது என்ன?

டெல்லி : 2018 ஆசிய விளையாட்டில் இந்தியா தற்போது வரை 13 தங்கம் வென்று பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. கடந்த 36 வருடங்களில் ஆசிய விளையாட்டில் பல நாடுகள் தாங்கள் வெல்லும் பதக்க எண்ணிக்கையில் வளர்ந்து வரும் நிலையில், இந்தியா தேய்ந்து வருகிறது என சொல்லுகின்றன புள்ளிவிவரங்கள்.

1982ஆம் ஆண்டு இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது. அப்போது 57 பதக்கங்களை வென்றது. பட்டியலில் ஐந்தாம் இடம் பிடித்தது. எப்போதுமே ஆசிய விளையாட்டு போன்ற பெரிய போட்டிகளை எடுத்து நடத்தும் போது, அந்த நாடு சிறப்பாக விளையாடி அதிக பதக்கங்கள் குவிக்கும். இந்தியாவும் அது போல ஆசிய விளையாட்டுப் போட்டிகளை எடுத்து நடத்திய 1951 மற்றும் 1982 இரண்டிலும் 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றது. அன்று அது பெரிய சாதனை. அந்த காலத்தில் இருந்து இந்தியாவின் செயல்பாட்டை ஒப்பிட்டு பார்ப்போம்.

India is going down in Asian games history, while other nations are growing

அன்று ஐம்பதில் இருந்த இந்தியா, இந்த முறை ஆசிய விளையாட்டில் இந்தியா 64 பதக்கங்களை தாண்டி வெல்ல உள்ளது. இது பெரிய முன்னேற்றம் இல்லையா? எனக் கேட்டால், நிச்சயம் இல்லை.

காரணம், 1982 முதல் விளையாட்டுகளின் எண்ணிக்கை ஆசிய போட்டியில் அதிகரித்து உள்ளது. பல புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆசிய கண்டத்தில் சில நாடுகளில் மட்டும் அல்லது ஒரு நாட்டில் மட்டும் வழக்கத்தில் இருக்கும் விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

1982இல் 147 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இன்று 465 போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகள் அதிகரித்துள்ளது என்றால் பதக்கமும் அத்தனை மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியா இன்னும் 50-60 என்ற எண்ணிக்கையை தாண்டவே தடுமாறி வருகிறது.

அதே சமயம், சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் 1982-இலும் முதல் மூன்று இடங்களை பிடித்தன. இன்றும் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. அவர்கள் பதக்க எண்ணிக்கையும் 1982இல் இருந்ததை விட அதிகரித்துள்ளது. அவர்கள் கூட விளையாட்டு எண்ணிக்கை அதிகரித்த அளவு பதக்க எண்ணிகையை அதிகரிக்கவில்லை என்றாலும், அவர்கள் 30 முதல் 150 சதவீதம் வரை வளர்ந்து இருக்கிறார்கள்.

India is going down in Asian games history, while other nations are growing

ஆசிய போட்டியில் 1982க்கு பின் வந்த புதிய நாடுகள், மற்றும் அன்று பின்தங்கி இருந்த நாடுகள் இன்று சொல்லிக் கொள்ளும்படியான அளவு பதக்கங்கள் வெல்கிறார்கள்.

உதாரணத்திற்கு, அன்று 10இல் இருந்த தாய்லாந்து பதக்கங்கள், 2018இல் இன்று இதுவரை 68 பதக்கங்கள் வரை வந்துள்ளது. அதே போல, ஹாங்காங், வியட்நாம் ஆகிய நாடுகள் 1982இல் ஒரு பதக்கம் மட்டுமே வென்றன. இன்று இதுவரை ஹாங்காங் 40, வியட்நாம் 37 பதக்கங்கள் வென்றுள்ளன.

மற்ற ஆசிய நாடுகள் வளர்ச்சியில் செல்ல இந்தியா மட்டும் ஏன் இன்னும் அதே நிலைமையில் தவிக்கிறது? இந்தியாவில் விளையாட ஆள் இல்லையா? அல்லது விளையாட ஆர்வமுள்ளவர்களை புறக்கணிக்கிறோமா? அணு ஆயுதம், டிஜிட்டல் இந்தியா பற்றி பேசும் நாம் விளையாட்டு வீரர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தர மறுக்கிறோம்?

Story first published: Saturday, September 1, 2018, 11:42 [IST]
Other articles published on Sep 1, 2018
English summary
India is going down in Asian games history, while other nations are growing. India going down from 1982 asian games.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+