3வது டெஸ்ட்- தோல்வியை நோக்கி இலங்கை
மும்பை: மும்பையில் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.
நான்காவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியதும் 4 முக்கிய விக்கெட்களை விரைவாக வீழ்த்தி இலங்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது இந்திய அணி.
333 ரன்கள் பின்தங்கிய நிலையில் நேற்று பிற்பகலுக்கு மேல் தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்களை எடுத்திருந்தது.
இந்த நிலையில் இன்று காலை ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்கை அணி விரைவாக நான்கு முக்கிய விக்கெட்களை இழந்தது.
தொடக்க ஆட்டக்காரர் பரணவிதனா 54 ரன்களி்ல் ஆட்டமிழந்தார். தில்ஷான் 16 ரன்களுக்கு மூட்டை கட்டப்பட்டார். அதன் பின்னர் மஹிளா ஜெயவர்த்தனா 12 ரன்களிலும், சமரவீரா முட்டையுடனும் ஆட்டமிழந்தனர்.
மாத்யூஸ் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முன்னணி வீரர்கள் சரிந்த நிலையில், சங்கக்காரா மட்டும் தாக்குப் பிடித்து சமாளித்தார்.
முன்னணி வீரர்கள் ஆட்டமிழந்தாலும் நிதானமாக ஆடிய சங்கக்காரா சதம் போட்டார். இன்றைய ஆட்ட நேர இறுதியில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்திருந்தது.
சங்கக்காரா 133 ரன்களும், குலசேகரா 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இன்னும் 59 ரன்கள் பின்தங்கியுள்ளது இலங்கை. நாளை ஆட்டத்தின் கடைசி நாள். மிச்சமுள்ள 4 விக்கெட்களையும் நாளை வேகமாக இந்தியா சுருட்டி விட்டால் மிக எளிதான வெற்றியைப் பெற முடியும்.
இன்றைய இந்தியப் பந்து வீச்சில் ஜாகிர்கான், ஓஜா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்
இதனால் இலங்கை கிட்டத்தட்ட தோல்வியின் எல்லைக்கு வந்து விட்டது.
இந்தியத் தரப்பில் ஜாகிர்கான், ஓஜா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களுடன் ஆடிக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications