Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சக் தே சிக்தே... பெல்ஜியத்துக்கு ஆட்டம் காட்டிய இந்தியா

புவனேஸ்வர்: ஹாக்கி எங்களுடைய தேசிய விளையாட்டு என்பதை, பெல்ஜியம் அணிக்கு இந்திய ஹாக்கி அணி நிரூபித்துக் காட்டியது.

ஹாக்கி உலக லீக் பைனல்சின் காலிறுதியில் நேற்று இந்திய வீரர்கள் காட்டிய ஆக்ரோஷம், அர்ப்பணிப்பு, ராணுவ வீரர்களிடம் மட்டுமே பார்க்க முடியும். மைதானத்தையும், எதிரணியையும் உறைய வைத்தது நமது அணியின் ஆட்டம். இந்த ஆண்டின் சிறந்த ஆட்டமாக அமைந்துள்ளது.

ஹாக்கி உலக லீக் பைனல்ஸ் போட்டிகள் ஒடிசாவின் புவனேஸ்வரில் நடக்கிறது. உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்தியா பங்கேற்றுள்ளது.

வலுவான பெல்ஜியத்துடன் மோதல்

வலுவான பெல்ஜியத்துடன் மோதல்

முதலில் நடந்த ரவுண்ட் ராபின் போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாத இந்திய அணி, ஏ பிரிவில் முதலிடம் பிடித்த பெல்ஜியத்துடன் கால் இறுதியில் நேற்று மோதியது. லீக் போட்டிகளில் அனைத்து ஆட்டங்களிலும் வென்ற, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பெல்ஜியம் அணி, தற்போது மிகவும் வலுவான அணியாகும்.

பெல்ஜியம் அணியுடன்

பெல்ஜியம் அணியுடன்

பெல்ஜியம் அணியுடன்இ ந்தியா இதற்கு முன் 71 போட்டிகளில் மோதியுள்ளது. அதில், 45ல் இந்தியா வென்றுள்ளது, 10ல் டிரா கண்டுள்ளது. பெல்ஜியம் 17 முறை வென்றுள்ளது. ஆனால், கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் பெல்ஜியம் வென்றுள்ளது.

சடன்டெத்தில் கீப்பர் காப்பாற்றினார்

சடன்டெத்தில் கீப்பர் காப்பாற்றினார்

நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தை பெல்ஜியம் அணி, இனி ஜென்மத்துக்கும் மறக்க முடியாது. வழக்கமான ஆட்ட நேரத்தில் 3-3 என்று சமநிலையில் முடிந்தது. அதற்கடுத்த ஷூட் அவுட் வாய்ப்பும் 2-2 என்ற சமநிலையில் முடிந்தது. கடைசியில் சடன் டெத் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் நமது வீரர்கள் 1-0 என்று வெற்றி பெற்றனர். அதன்படி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் குர்ஜந்த் சிங், 35வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் கோலடித்து இந்தியாவுக்கு 2-0 என்று முன்னிலை தேடித் தந்தனர். 46வது நிமிடத்தில் ருபிந்தர்பால் சிங் கோலடித்தார்.

கோலை தடுத்து அசத்தினார்

கோலை தடுத்து அசத்தினார்

இதற்கிடையில் பெல்ஜியமும் மூன்று கோல் அடிக்க, ஆட்டம் 3-3 என்று டிராவில் முடிந்தது. இந்த நிலையில் தான், வெளியில் அமரவைக்கப்பட்ட கோப்கீப்பர் ஆகாஷ் சிக்தே களமிறங்கினார். ஷூட் அவுட் மற்றும் சடன் டெத்தில் சிறப்பாக கோல்களை தடுத்து அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய பலமாக இருந்தார்.

3-3 என்ற சம நிலை

3-3 என்ற சம நிலை

ஆட்ட நேரத்தில் 3-3 என்று சமநிலையில் இருந்ததால் அளிக்கப்பட்ட ஷூட் அவுட்டில், இரு அணிகளும் 2 கோல்களைப் போட்டன. ஷூட் அவுட்டில் மன்பிரீத் சிங் கோலடித்தார். ஆனால் பெல்ஜியத்தின் வாய்ப்பை சிக்தே தடுத்தார். அவர் மொத்தம் 4 கோல்களை தடுத்து அசத்தினார்.

மற்றொரு கால் இறுதியில் ஆஸ்திரேலியா 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.

Story first published: Friday, December 8, 2017, 21:09 [IST]
Other articles published on Dec 8, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+