Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா திரில் வெற்றி!

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

டர்பனில் நடந்த முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந் நிலையில் இரண்டாவது போட்டி ஜோகனஸ்பர்க்கில் நேற்று நடந்தது.டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 47.2 ஓவர்களில் 190 ரன்களை எடுத்தது.

யுவராஜ் சிங் மட்டும் நன்றாக விளையாடி 53 ரன்கள் எடுத்தார். கேப்டன் டோணி 38 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை.

இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியினர் முனாப் படேலின் அபார பந்து வீச்சால் நிலை குலைந்தது.அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஸ்மித் 77 ரன்கள் எடுத்து படேலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் நிலைக்கவில்லை. 43 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்ததது.

43வது ஓவரில் 6 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், முரளி விஜய் தடுத்து எறிந்த பந்தை யுவராஜ் சிங் பிடித்து ஸ்டெயினை ரன்-அவுட்டாக்கினார். இதன்மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி 1-1க்கு என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+