For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

16 ஆண்டுகளில் இல்லாத மோசம்.. காமன்வெல்த்-ல் இந்தியாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்.. அதிருப்தியில் ரசிகர்கள்

பிர்மிங்கம்: காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்திருந்தாலும், இந்தாண்டு ஏமாற்றமான ஒன்றாகவே அமைந்துள்ளது.

நடப்பாண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

கடந்த ஜூலை 29ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் நேற்றைய தினம் நிறைவு விழாவுடன் முடிவுக்கு வந்தது.

 பதக்கப்பட்டியல் விவரம்

பதக்கப்பட்டியல் விவரம்

காமன்வெல்த் வரலாற்றில் அதிகபட்சமாக இந்தாண்டு 72 நாடுகளில் இருந்து மொத்தமாக 5,054 பேர் கலந்துக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு 280 வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம் என மொத்தமாக 178 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவின் நிலை

இந்தியாவின் நிலை

இங்கிலாந்து 176 பதக்கங்களை வென்று ( 57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம் ) 2வது இடத்தை பிடித்துள்ளது. 3வது இடத்தில் கனடா 92 பதக்கங்களுடன் உள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா 61 பதக்கங்களுடன் 4வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் ஆகியவற்றை வென்றுள்ளது.

ஏமாற்றமான சீசன்

ஏமாற்றமான சீசன்

இந்நிலையில் இந்த முறை இந்தியாவுக்கு சற்று ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. ஏனென்றால் கடந்த 20 ஆண்டுகளில் 2வது மிகக்குறைவான பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 16 ஆண்டுகளில் மோசமான ரெக்கார்ட் ஆகும். இந்தியா அதிகபட்சமாக கடந்த 2010ம் ஆண்டு 101 பதக்கங்களை குவித்திருந்தது. குறைந்தபட்சமாக கடந்த 2006ம் ஆண்டு 50 பதக்கங்களை வென்றது. இதற்கு அடுத்தபடியாக தற்போது 61 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது.

பதக்க விவரங்கள்

பதக்க விவரங்கள்

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் பதக்கங்களை பார்க்கலாம்.

2002, மென்செஸ்டர் - 69 பதக்கங்கள்

2006, ஆஸ்திரேலியா - 50 பதக்கங்கள்

2010, டெல்லி - 101 பதக்கங்கள்

2014, க்ளாஸ்கோவ் - 64 பதக்கங்கள்

2018, கோல்ட் கோஸ்ட் - 66 பதக்கங்கள்

2022, பிர்மிங்கம் - 61 பதக்கங்கள்

தங்கங்களும் குறைவு

தங்கங்களும் குறைவு

இதே போல தங்கப்பதக்கமும் குறைந்துள்ளது.

2002, மென்செஸ்டர் - 30 தங்கப்பதக்கம்

2006, ஆஸ்திரேலியா - 22 தங்கப்பதக்கங்கள்

2010, டெல்லி - 38 தங்கப்பதக்கங்கள்

2014, க்ளாஸ்கோவ் - 15 தங்கப்பதக்கங்கள்

2018, கோல்ட் கோஸ்ட் - 26 தங்கப்பதக்கங்கள்

2022, பிர்மிங்கம் - 22 பதக்கங்கள்

பதக்கம் குறைய காரணம்

பதக்கம் குறைய காரணம்

இந்தாண்டு இந்தியாவுக்கு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் இருந்து பதக்கங்கள் கிடைக்காதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் துப்பாக்கிச்சுடுதல் வீரர், வீராங்கனைகள் மட்டுமே 16 பதக்கங்களை வென்றிருந்தனர். தற்போது அவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, August 10, 2022, 16:48 [IST]
Other articles published on Aug 10, 2022
English summary
Commonwealth medal tally for India ( காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் பதக்கப்பட்டியல் ) காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைவான பதக்கங்களை வென்றுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+