Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரியோ ஒலிம்பிக்கில் கணக்கைத் தொடங்கிய இந்தியா- பதக்கப் பட்டியலில் 70வது இடம்

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், பதக்கப்பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது. ரியோ ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியா 70 இடத்தில் உள்ளது.

ஒலிம்பிக் மைதானத்தில் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்படாதா? தேசியக்கொடி பறக்காதா என்ற 120 கோடி இந்தியர்களின் ஏக்கத்தைப் போக்கியுள்ளார் சாக்ஷி மாலிக்.

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை "பிரீ ஸ்டைல்" பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதிய இந்தியாவின் சாக்ஷி மாலிக், அவரை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டி சென்று சாதனை படைத்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சாக்ஷி மாலிக் பெற்ற வெண்கலப் பதக்கம், இந்தியாவுக்கான முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பதக்கப்பட்டிலில் 70வது இடம்

சாக்ஷி மாலிக் வென்ற வெண்கலப் பதக்கத்தின் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது. ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்துடன், பதக்கப் பட்டியலில் 70வது இடத்தில் இந்தியா உள்ளது.

ஒலிம்பிக்கில் இந்தியா

ஒலிம்பிக்கில் இந்தியா

1900ம் ஆண்டு பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்தான் இந்தியா முதன்முதலில் பங்குபெற்றது. அப்போட்டியில் தடகளத்தில் பங்கேற்ற நார்மன் பிரிட்சார்ட் எனும் வீரர் இரு வெள்ளிப் பதக்கங்களைத் தட்டினார். இந்தியா ஒலிம்பிக் விளையாட்டுகளில் மொத்தம் 26 பதக்கங்கள்தான் வென்றிருந்தது.

27 பதக்கங்கள்

27 பதக்கங்கள்

இன்று ஒரு வெண்கலம் வென்றதன் மூலம் 9 தங்கம், 6 வெள்ளி 12 வெண்கலப்பதக்கங்களை இதுவரை இந்தியா வென்றுள்ளது.

தேசிய விளையாட்டான ஹாக்கியில் 8 தங்கப் பதக்கங்களை வென்றதோடு, 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளது.

சிட்னி ஒலிம்பிக்

சிட்னி ஒலிம்பிக்

2000ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியில் கர்ணம் மல்லேஸ்வரி வென்ற வெண்கலப் பதக்கம் வென்று பெருமை தேடித்தந்தார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப்பெண் இவர்தான்.

அபினவ் பிந்த்ரா

அபினவ் பிந்த்ரா

2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா பெற்ற தங்கப்பதக்கமே இந்தியா சார்பாக இதுவரை தனிநபர் பெற்ற முதல் மற்றும் ஒரே ஒரு தங்கப் பதக்கமாகும்.

லண்டன் ஒலிம்பிக்

லண்டன் ஒலிம்பிக்

2012ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான் இந்தியா அதிகபட்சமாக 6 பதக்கங்கள் வென்றது. விஜய்குமார்- வெள்ளி (துப்பாக்கி சுடுதல்), சுசில்குமார் - வெள்ளி (மல்யுத்தம்) வென்றனர். சாய்னா நெஹ்வால் (பாட்மின்டன்), யோகேஸ்வர் தத் (மல்யுத்தம்), ககன் நரங் (துப்பாக்கி சுடுதல்), மேரி கோம் (குத்துச்சண்டை) ஆகியோர் தலா ஒரு வெண்கலப் பதக்கம் வென்றனர்.

ரியோவில் இந்தியா

ரியோவில் இந்தியா

2016 ரியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா 15 பிரிவுகளில் போட்டியிடுகிறது. 120 பேர் கொண்ட இந்திய வீரர்கள் குழு ரியோ சென்றுள்ளது. இந்தியா சார்பில் அதிகம் பேர் பங்கேற்பது இந்தமுறைதான். முதன் முறையாக வெண்கலம் வென்று பதக்கப்பட்டியலில் இந்தியாவின் பெயரை இடம்பெறச் செய்துள்ளார் சாக்ஷி மாலிக்.

பதக்கப்பட்டியலில் இடம்

பதக்கப்பட்டியலில் இடம்

ரியோ ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து சீனா இடையே இரண்டாவது இடத்திற்கு பலத்த போட்டி நிலவுகிறது. இப்போதைக்கு சீனா 3வது இடத்தில் உள்ளது. ரஷ்யா நான்காவது இடத்திலும், ஜெர்மனி 5வது இடத்திலும் உள்ளன.

Story first published: Thursday, August 18, 2016, 11:47 [IST]
Other articles published on Aug 18, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+