ஆசிய விளையாட்டு : தீபா கர்மாகர் ஜிம்னாஸ்டிக்ஸ் பேலன்ஸ் பீம் இறுதியில் வெல்வாரா?
ஜகார்த்தா : இந்தியாவின் முதன்மை ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான தீபா கர்மாகர், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் (Vault) இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தாலும், பேலன்ஸ் பீம் (Balance Beam) இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
தகுதிச் சுற்றில் இந்தியா சார்பாக தீபா கர்மாகர், பிரனிதி நாயக், அருணா புத்தா ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். இதில் பிரனிதி 13.245 புள்ளிகள் மற்றும் அருணா 13.350 ஆகிய, அதிக புள்ளிகளை பெற்று வால்ட் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

அதே சமயம், தீபா 13.225 புள்ளிகள் பெற்றார். ஒரு நாட்டில் இருந்து இருவர் மட்டுமே வால்ட் இறுதிச் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற விதியின்படி தீபா தகுதி இழந்தார். எனினும், ஆகஸ்ட் 24 அன்று நடக்கும் பேலன்ஸ் பீம் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
Story first published: Monday, August 27, 2018, 12:52 [IST]
Other articles published on Aug 27, 2018


Click it and Unblock the Notifications