Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், ஒரு விளையாட்டு சாம்பியன் தெரியுமா? கல்லூரி காலத்தை பாருங்க

மும்பை: இந்தியாவின் புதிய குடியரசு துணை தலைவர் தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் மாபெரும் வெற்றியை பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். என்டிஏ வேட்பாளரும், முன்னாள் மகாராஷ்டிரா ஆளுநருமான இவர், 452 வாக்குகளைப் பெற்று, எதிர்க்கட்சி வேட்பாளரான நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டியை வீழ்த்தினார்.

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து, இந்தத் தேர்தல் நடைபெற்றது. இதில் 96% நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.ராதாகிருஷ்ணன், நான்கு மாநிலங்களில் ஆளுநராகவும், கோயம்புத்தூரிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய பல அரசியல் அனுபவத்தை கொண்டவர்.

CP Radhakrishnan

இந்த நிலையில், ராதாகிருஷ்ணன் தனது கல்லூரி நாட்களில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கினார். கல்வியில் மட்டுமல்லாமல், விளையாட்டிலும் அவர் மிகச் சிறந்தவராக இருந்தார். குறிப்பாக டேபிள் டென்னிஸ் சாம்பியனாக திகழ்ந்தார்.

மேலும் ராதாகிருஷ்ணனுக்கு தடகளத்திலும் ஆர்வம் இருந்தது. மேலும் அவர் ஓட்டம், கிரிக்கெட் மற்றும் கைப்பந்து ஆகியவற்றையும் விரும்பி விளையாடினார் .ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள வி.ஓ. சிதம்பரம் கல்லூரியில் வணிக நிர்வாக இளங்கலைப் பட்டம் பயின்றார்.

இந்தக் காலகட்டத்தில், அவர் கல்லூரி டேபிள் டென்னிஸ் சாம்பியனாக உருவெடுத்தார். கல்லூரி அளவிலான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் அவர் பெற்ற வெற்றி, கல்விக்கு வெளியே அவரது ஆரம்பகால பொது சாதனைகளில் ஒன்றாகும். இதனால் கல்லூரி பருவத்தில் சக மாணவர்களிடையே அவருக்கு மிகவும் புகழை சேர்த்தது.

இதே போன்று ராதாகிருஷ்ணன், தடகள போட்டிகளில் தவறாமல் பங்கேற்றுள்ளார். அவர் டேபிள் டென்னிஸில் மட்டுமல்லாமல், நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரராகவும் திறமையை வெளிப்படுத்தினார். தடகள நிகழ்வுகளில் உறுதித்தன்மையையும் அர்ப்பணிப்பையும் காட்டினார். அவரது தடகள ஆர்வம், கிரிக்கெட் மற்றும் கைப்பந்து விளையாடுவதிலும் வெளிப்பட்டுள்ளது. இதனால் தற்போது துணை குடியரசுத் தலைவர் பதவியை வென்றுள்ள ராதாகிருஷ்ணன், மாணவர்களிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Tuesday, September 9, 2025, 23:40 [IST]
Other articles published on Sep 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+