For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாதனை வெற்றி.. 22வது பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் வென்றார்!

டெல்லி : இந்தியாவின் பங்கஜ் அத்வானி 22வது உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறார்.

இந்தியாவுக்கு பல ஆண்டுகளாக பெருமை சேர்த்து வரும் பங்கஜ் அத்வானி இந்த முறையும் பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்று சாதித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி மீண்டும் நாட்டுக்காக ஆடத் துவங்கிய பங்கஜ் அத்வானி, பில்லியர்ட்ஸ் அல்லது ஸ்நூக்கர் விளையாட்டில் தொடர்ந்து நாட்டுக்கு பட்டம் வென்று கொடுத்து வருகிறார்.

கடந்த ஆறு ஆண்டுகளில், அவர் வெல்லும் ஐந்தாவது பில்லியர்ட்ஸ் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் இறுதிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பங்கஜ், 6 - 2 என்ற ஸ்கோரில் போட்டியை வென்று பட்டத்தை வென்றார்.

India’s Pankaj Advani wins 22nd World Billiards Championship

கடந்த 2003 முதல் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கரில் பட்டங்களை குவித்து வரும் பங்கஜ், இதுவரை இந்த விளையாட்டுக்களில் எந்த வீரரும் வெல்லாத அளவுக்கு பட்டங்களை குவித்துள்ளார்.

தன் 22வது பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பற்றி பேசிய பங்கஜ் அத்வானி, "ஒவ்வொரு முறை நான் உலக சாம்பியன்ஷிப் பில் பங்கேற்கும் போது, ஒரு விஷயம் மட்டும் தெளிவாக உள்ளது. நன்றாக பிரகாசிக்க வேண்டும் என்ற என் உந்துதல் வீழ்ந்துவிடவில்லை. என் பசி மற்றும் நெருப்பு இன்னும் இருக்கிறது என்பதற்கு சாட்சியாகவே இந்த வெற்றி இருக்கிறது" என்று தெரிவித்தார்.

Story first published: Sunday, September 15, 2019, 21:33 [IST]
Other articles published on Sep 15, 2019
English summary
India’s Pankaj Advani wins 22nd World Billiards Championship
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+