Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

India’s schedule Tokyo Olympics Aug 6: சாதிக்குமா பெண்கள் ஹாக்கி அணி? கோல்ஃபில் அதிதி சாதிப்பாரா?

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்றைய 14வது நாள், இந்தியாவுக்கு சிறப்புமிக்க நாளாக அமைந்தது. ஆம்! 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் மெடல் வென்றது.

ஜெர்மனியிடம் 5 - 4 என்ற கோல் கணக்கில் வென்று இந்தியா வெண்கலம் கைப்பற்றியது. கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் அணி ஹாக்கியில் தங்கம் வென்றது.

அதன்பின் இப்போதுதான் மீண்டும் பதக்கம் வெல்கிறது. இந்த போட்டியில் இந்தியாவிற்காக சிம்ரான்ஜீத் சிங் 17 மற்றும் 34வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஹர்திக் சிங் 27வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஹர்மன்பிரீத் சிங் 29வது நிமிடத்தில் கோல் அடித்தார். ருபிண்டர் பால் சிங் 31வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதில் இந்தியாவின் வெற்றிக்கு சிம்ரான்ஜீத் சிங் மற்றும் கீப்பர் ஸ்ரீஜேஷ் முக்கியமான காரணமாக இருந்தனர்.

இந்நிலையில், நாளை (ஆக.6) இந்தியா என்னென்ன போட்டிகளில் விளையாடுகிறது என்று பார்க்கலாம். இதில், மிக மிக முக்கியமான போட்டியாக அமையப் போவது பெண்கள் ஹாக்கி போட்டி தான். ஆம்! வெண்கலப் பதக்கத்துக்கான இந்த போட்டியில், இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது . இதில் இந்திய அணி வென்றுவிட்டால், வரலாற்றில் முதன்முறையாக இந்திய பெண்கள் ஹாக்கி மெடல் வெல்லும் சாதனை படைக்கப்படும்.

India’s Schedule at Tokyo Olympics 2020, Day 15, August 6

கோல்ஃப்: மகளிர் சுற்று 3ல் தீக்ஷா தாகர் களமிறங்குகிறார். இப்போட்டி, இந்திய நேரப்படி அதிகாலை 5:29 மணிக்கு தொடங்குகிறது.

கோல்ஃப்: மகளிர் சுற்று 3ல் அதிதி அசோக் களமிறங்குகிறார். இப்போட்டி, இந்திய நேரப்படி அதிகாலை 5:48 மணிக்கு தொடங்குகிறது.

ஹாக்கி: இந்திய நேரப்படி காலை 7:00 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

மல்யுத்தம்: பஜ்ரங் புனியா vs எர்னாசர் அக்மதாலீவ், ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ, சுற்று 16. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ காலிறுதிப் போட்டியில் தகுதி பெற்றால்)

ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ அரையிறுதியிப் போட்டியில் பஜ்ரங் புனியா (தகுதி பெற்றால்)

India’s Schedule at Tokyo Olympics 2020, Day 15, August 6

மல்யுத்தம்: சீமா பிஸ்லா vs சர்ரா ஹம்டி பெண்கள் ஃப்ரீஸ்டைல் 50 கிலோ சுற்று 16 - இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

பெண்களின் ஃப்ரீஸ்டைல் 50 கிலோ காலிறுதிப் போட்டியில் சீமா பிஸ்லா (தகுதி பெற்றால்)

பெண்களின் ஃப்ரீஸ்டைல் 50 கிலோ செமி ஃபைனலில் சீமா பிஸ்லா (தகுதி பெற்றால்)

தடகளம்: பெண்களின் 20 கிமீ race walk இறுதிப் போட்டியில் பவ்னா ஜாட், பிரியங்கா கோஸ்வாமி பங்கேற்கின்றனர். இந்திய நேரப்படி இப்போட்டி மதியம் 1:00 மணிக்கு தொடங்குகிறது.

தடகளம்: ஆண்கள் 4x400 மீ ரிலே சுற்று 1 Heat 2, மாலை 5:07 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த போட்டிகள் அனைத்திலும் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் வெற்றிப் [பெற வாழ்த்துகள்.

Story first published: Thursday, August 5, 2021, 22:55 [IST]
Other articles published on Aug 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+