For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்றைய 12வது நாள், உண்மையில் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. அதில் மிகப்பெரிய ஏமாற்றம் ஹாக்கி போட்டியில்.

ஆம்! இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை முன்னேறி இருந்தது. இதனால், இப்போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், பெல்ஜியம் அணியுடன் மோதிய இந்தியா, 5-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. எனினும், வரும் ஆகஸ்ட்.5ம் தேதி நடக்கும் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில், ஜெர்மனி அணியுடன் இந்தியா மோதுகிறது.

India’s schedule at Tokyo Olympics 2020 for 4th August

சரி.. நாளை (ஆக.4) அதாவது ஒலிம்பிக்கின் 13வது நாளில் இந்தியா பங்கேற்கவுள்ள போட்டிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

தடகளம்: ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, குரூப் 'A' வில் இருந்து நாளை களம் காண்கிறார். இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5:35 மணிக்கு தொடங்குகிறது.

கோல்ஃப் விளையாட்டில் இந்தியாவின் அதிதி அஷோக், பெண்கள் பிரிவு 1ல் களம் காண்கிறார். இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5:55 மணிக்கு தொடங்குகிறது.

India’s schedule at Tokyo Olympics 2020 for 4th August

தடகளம்: ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ஷிவ்பால் சிங், குரூப் 'B' வில் இருந்து நாளை களம் காண்கிறார். இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 7:05 மணிக்கு தொடங்குகிறது

கோல்ஃப்: பெண்கள் சுற்று 1 ல் காலை 7:39 மணிக்கு இந்திய வீராங்கனை தீக்ஷா தாகர் களம் காண்கிறார்.

குத்துச்சண்டை: லோவ்லினா போர்கோஹெய்ன் Vs புசெனாஸ் சுர்மெனெலி ஆகியோர் பெண்கள் வெல்டர்வெயிட் (69 கிலோ) அரையிறுதியில் காலை 11 மணிக்கு நேருக்கு நேர் களம் காண்கின்றனர்.

மகளிர் ஹாக்கி அரையிறுதி: இந்தியா vs அர்ஜென்டினா. இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

India’s schedule at Tokyo Olympics 2020 for 4th August

மல்யுத்தம்:

ரவிக்குமார் Vs ஆஸ்கார் டைகோரோஸ். ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 57 கிலோ 16 சுற்றில் களம் காண்கின்றனர்.

ஒருவேளை ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 57 கிலோ 16 சுற்றில் வெற்றிப் பெற்றால் காலிறுதியில் பங்கேற்பார்.

ஒருவேளை காலிறுதியில் வெற்றிப் பெற்றால் தொடர்ந்து ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 57 கிலோ அரையிறுதியில் ரவிக்குமார் பங்கேற்பார்.

அன்ஷு மாலிக் Vs இரினா குராச்கினா. பெண்கள் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ 16 சுற்றில் மோதுகின்றனர்.

தொடர்ந்து, பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 57 கிலோ 16வது சுற்றில் வெற்றிப் பெற்றால் அன்ஷு மாலிக் காலிறுதியில் பங்கேற்பார்.

தொடர்ந்து, பெண்கள் ஃப்ரீஸ்டைலில் 57 கிலோ காலிறுதியில் வென்றால், அரை இறுதியில் அன்ஷு மாலிக் பங்கேற்பார்.

தீபக் புனியா vs எகெரெகெம் அகியோமர். ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 86 கிலோ 16வது சுற்றில் மோதுகின்றன.

தொடர்ந்து, ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 86 கிலோ 16வது சுற்றில் வெற்றிப் பெற்றால் தீபக் புனியா காலிறுதியில் பங்கேற்பார்.

தொடர்ந்து, தீபக் புனியா ஆண்களுக்கான காலிறுதியில் வெற்றிப் பெற்றால் ஃப்ரீஸ்டைல் 86 கிலோ அரை இறுதியில் பங்கேற்பார்.

Story first published: Tuesday, August 3, 2021, 21:44 [IST]
Other articles published on Aug 3, 2021
English summary
India schedule at Tokyo Olympics 2020 4th Aug - ஒலிம்பிக்ஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+