Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசியக் கோப்பை ஹாக்கி.. நடப்பு சாம்பியன் தென்கொரியாவுடன் இந்தியா டிரா

டாக்கா: ஆசியக் கோப்பை ஹாக்கியில் நடப்பு சாம்பியனான தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியில் இருந்து இந்தியா தப்பியது.

ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிகள் வங்கதேசத்தில் நடந்து வருகின்றன. இதில் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் தீபாவளி நாளான நேற்று துவங்கியது.

இதில் உலகத் தரவரிசையில் 13வது இடத்தில் உள்ள நடப்பு ஆசிய சாம்பியனான தென் கொரியாவை, உலகத் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள இந்தியா சந்தித்தது.

தென் கொரியா முன்னிலை

தென் கொரியா முன்னிலை

முதல் சுற்றில் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் வென்றிருந்த இந்திய அணிக்கு எதிராக 41வது நிமிடத்தில் கோல் அடித்து தென் கொரியா முன்னிலை பெற்றது. ஜோயர்டு மரிஜ்னே கோச்சாக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி, இந்த ஆண்டு கோப்பையை வெல்லும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

கோலடிக்க திணறியது

கோலடிக்க திணறியது

முதல் சுற்றில் தோல்வியே சந்திக்காவிட்டாலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், அதிக கோல் வித்தியாசத்தி்ல வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அதேபோல் தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் கோலடிக்கும் வாய்ப்பை எதிரணிக்கு அளித்ததுடன், கோல் ஏதும் அடிக்காமல் இந்தியா திணறியது. 60வது நிமிடத்தில் குர்ஜான் சிங் கோலடிக்க ஆட்டம் டிராவில் முடிந்தது.

பெனால்டி கார்னர் கிடைக்கவில்லை

பெனால்டி கார்னர் கிடைக்கவில்லை

தென் கொரியாவின் தடுப்பாட்டத்துக்கு முன்னாள், இந்திய வீரர்கள் எதுவும் செய்ய முடியாமல் திணறினர். பந்து பெரும்பாலும் இந்திய வீரர்கள் பக்கம் இருந்தபோதும், அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்தப் போட்டியில், இரு அணிகளுக்கும் தலா ஒரு பெனால்டி கார்னர்கள் மட்டுமே கிடைத்தன. அது இரு அணிகளுக்கும் கோலானது. இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தன.

இந்தியா மலேசியாவுடன் மோதல்

இந்தியா மலேசியாவுடன் மோதல்

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் மலேசியா 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்றது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் மலேசியா முதலிடத்தில் உள்ளது. இன்று நடக்கும் ஆட்டங்களில் இந்தியா மலேசியாவையும், பாகிஸ்தான் தென்கொரியாவையும் சந்திக்கின்றன.

Story first published: Thursday, October 19, 2017, 13:56 [IST]
Other articles published on Oct 19, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+