மலேசியாவை கதறடித்த இந்தியா, பாகிஸ்தானுக்காக வெயிட்டிங்!
டாக்கா: ஆசியக் கோப்பை ஹாக்கியின் சூப்பர் 4 சுற்றில் 6-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை கதறடித்த இந்தியா, நாளை நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக தாராளமாக கோலடிக்கத் தயாராக உள்ளது.
ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் வங்கதேசத்தில் நடந்து வருகின்றன. ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியா, லீக் ஆட்டங்களில் ஜப்பானை 5-1, வங்கதேசத்தை 7-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
பாகிஸ்தானுடன் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. மிகப் பெரிய கோல் கணக்கில் வெல்வதற்கு வாய்ப்பிருந்தும் இந்திய அணி தவறிவிட்டது.

தென் கொரியாவுடன் டிரா
இந்த நிலையில், அடுத்தகட்டமான சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் தென் கொரியாவுடன் 1-1 என்று இந்தியா டிரா செய்தது.

மலேசியாவை அடித்து துவம்சம்
நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் மலேசியாவை 6-2 என்ற கோல் கணக்கில் அடித்து துவம்சம் செய்தது. இந்த ஆசியக் கோப்பை போட்டியில் தோல்வியடையாத அணியாக இந்தியா உள்ளது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென் கொரியாவுடன் 1-1 என்று பாகிஸ்தான் டிரா செய்தது.

விட்ட குறை தொட்ட குறை
நாளை நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மீண்டும் மோதும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. டிரா செய்தாலே, இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறிவிடும்.

ஈடு செய்ய வாய்ப்பு
இருந்தாலும், விட்ட குறை தொட்ட குறையாக முந்தையப் போட்டியில் அதிக கோல் கணக்கில் வெல்லும் வாய்ப்பை இழந்ததை ஈடு செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications