ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியாவிடம் வசதியில்லை: மத்தி்ய விளையாட்டு அமைச்சர்

ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்து அமைச்சர் கில் பேசுகையில், 'அவையில் இருப்பவர்களும் சரி, வெளியிலும் சரி, மிகவும் சாதாரணமாக, இந்தியா ஒலிம்பிக் போட்டியை நடத்தலாம் என சொல்கிறார்கள்.
பெய்ஜிங் ஒலிம்பிக் நிகழ்ச்சிக்காக சீனா 50 பில்லியன் டாலர்கள் செலவழித்தது. அவ்வளவு செலவு செய்ய நீங்கள் தயாரா? நம் நாட்டின் வறுமை நிலையைப் பாருங்கள். ஒலிம்பிக் நடத்துவது பற்றி யோசிப்பது சரி வராது என்றார்.
டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தினால் அதன் பின்னர், 2020ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முயற்சிக்கலாம் என இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ள கருத்து விளையாட்டு ஆர்வலர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:33 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications