தரவரிசையை தக்க வைத்த ஹாக்கி அணி
டெல்லி: ஹாக்கி அணிகளுக்கான தரவரிசையில் இந்திய ஆடவர் அணி, 6வது இடத்தை தக்க வைத்தது. மகளிர் அணி, 10வது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டது.
2017 துவக்கத்தில், உலகத் தரவரிசையில் இந்திய ஆடவர் அணி, 6வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு ஆசியக் கோப்பையை வென்றது, சமீபத்தில் நடந்த உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் போட்டியில் வெண்கலம் வென்றது ஆகியவை இந்திய அணி, 6வது இடத்தை தக்க வைக்க உதவியது.

அதே நேரத்தில் 5வது இடத்தில் உள்ள ஜெர்மனியை இந்தியா நெருங்கியுள்ளது. உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தியதன் மூலம், இரு அணிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்துள்ளது. இந்திய அணி,1566 புள்ளிகளுடன் உள்ளது. ஜெர்மனி, 1680 புள்ளிகளுடன் உள்ளது.
உலக ஹாக்கி லீக் பைனல்ஸில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா, உலகத் தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்தது. அர்ஜென்டீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. பெல்ஜியம் மூன்றாவது இடத்திலும், நெதர்லாந்து 4வது இடத்திலும் உள்ளன.
ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு, இந்த ஆண்டு முன்னேற்றமான ஆண்டாகும். 12வது இடத்தில் இருந்து, 10வது இடத்துக்கு முன்னேறிய மகளிர் அணி, அந்த இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டுள்ளது.
நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து, அர்ஜென்டீனா, அதற்கடுத்த இடங்களில் உள்ளன.
Story first published: Wednesday, December 13, 2017, 20:46 [IST]
Other articles published on Dec 13, 2017


Click it and Unblock the Notifications