சார்க் விளையாட்டுப் போட்டிகள்-90 தங்கத்துடன் இந்தியா முதலிடம்

11 வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் வங்காளதேச தலைநகர் டாக்காவில் கடந்த 12 நாட்களாக நடந்தது.
இதில் போட்டியின் முதல் நாளிலிருந்தே இந்தியா பதக்கங்களை அள்ளிக் கொண்டிருந்தது. கடைசி நாளிலும் இந்தியாவின் பதக்க வேட்கை தணியவில்லை.
துப்பாக்கி சுடுதல், தடகளம், நீச்சல், பேட்மிண்டன், சைக்கிள், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியா பதக்கங்களை அள்ளியது. கைப்பந்து, கபடியில் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
தனிநபரில் டேபிள் டென்னிஸ் பிரிவில் வீராங்கனை மதுரிகா பட்கர், துப்பாக்கி சுடுதல் வீரர்கள் ஓம் பிரகாஷ், சுரேந்திரசிங் ரதோத் ஆகியோர் தலா 4 தங்கப்பதக்கத்தை வென்றனர்.
இறுதியில் இந்தியா 90 தங்கம், 55 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 175 பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பிடித்தது.
2வது இடம் பாகிஸ்தானுக்குக் கிடைத்தது. இதன் தங்க எண்ணிக்கை 19. மொத்தம் 80 பதக்கங்களைப் பெற்றது.
18 தங்கம் உள்பட 97 பதக்கங்களுடன் வங்கதேசம் 3வது இடத்தைப் பிடித்தது.
16 தங்கத்துடன் மொத்தம் 104 பதக்கங்களை வென்ற இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்தது.
அடுத்த தெற்காசிய விளையாட்டுப் போட்டி 2012ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது.
இறுதிப் பதக்க பட்டியல்:
நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
இந்தியா - 90 55 30 175
பாகிஸ்தான் - 19 25 36 80
வங்கதேசம் - 18 23 56 97
இலங்கை - 16 34 54 104
நேபாளம் - 7 9 19 35
ஆப்கானிஸ்தான் - 7 9 16 32
பூட்டான் - 0 2 3 5
மாலத்தீவு - 0 0 2 2
மொத்தம் - 157 157 214 528.
Story first published: Wednesday, December 7, 2011, 18:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications