Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதே பட்டாசு பெட்டியை நமக்கே கொடுத்திட்டாங்களே: என்ன கொடுமை சார் இது!

டெல்லி: உலகக் கோப்பை போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியை இதுவரை இந்தியா தோற்கடித்தது இல்லை. இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒரு கிண்டலான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 6 முறை மோதியுள்ளன. 6 முறையும் இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானை கிண்டல் செய்யும் வகையில் அந்நாட்டு ரசிகர் ஒருவர் 1992ம் ஆண்டில் இருந்து பட்டாசுகள் அடங்கிய அட்டைப்பெட்டியுடன் இன்றும் காத்துக் கொண்டே இருப்பது போன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் விளம்பரம் வெளியானது.

India vs SA ‘Mauka Mauka’ ad: SA taunts IND with ‘The Elusive Maukaa’ after Ind Vs Pak promo!

இந்நிலையில் இந்தியாவை கிண்டலடித்து அதே பட்டாசு அட்டைப்பெட்டி விளம்பரத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை இந்தியா இதுவரை ஒருமுறை கூட வென்றது இல்லை.

இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பரத்தில் காண்பிக்கப்படுவதாவது,

இந்திய ரசிகர்கள் சிலர் சேர்ந்து டிவியில் கிரிக்கெட் போட்டியை பார்க்கையில் அழைப்பு மணி அடிக்கிறது. கதவை திறந்தால் தென்னாப்பிரிக்க வீரர்கள் இருவர் பட்டாசுகள் அடங்கிய அட்டைப் பெட்டியை கொடுத்துவிட்டு மோக்கா, மோக்கா என்று நக்கலாக கூறி சிரித்துக் கொண்டே செல்கிறார்கள்.

உலகக் கோப்பை போட்டிகளில் 1992, 1999, 2011 ஆகிய ஆண்டுகளில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியுள்ளன. மூன்று முறையும் தென்னாப்பிரிக்கா தான் வெற்றி பெற்றுள்ளது.

Story first published: Monday, February 16, 2015, 15:42 [IST]
Other articles published on Feb 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+