Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே நாளில் 4 தங்கம்.. அடித்து தூக்கிய இந்தியா.. ஆசிய விளையாட்டு பதக்கப் பட்டியலில் முன்னேற்றம்

நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதன்கிழமை (செப்டம்பர் 30) இந்தியாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க தினமாக அமைந்தது. ஒரே நாளில் அடுத்தடுத்து 4 தங்கப் பதக்கங்களை வாரிக்குவித்த இந்திய அணி, தனது மொத்த தங்கப் பதக்க எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தி, பதக்கப் பட்டியலில் அதிரடியாக 8வது இடத்திற்கு முன்னேறியது. அதிலும் வில்வித்தையின் மூன்று விதப் போட்டிகளிலும் தங்கம் வென்று சாதனை படைக்கப்பட்டது.

India Wins 4 Gold Medals in a Single Day at Asian Games 2026 Historic Leap to 8th Place in Medal Tally

ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்கள்

வில்வித்தை மகளிர் அணி தங்கம்: மகளிர் காம்பவுண்ட் வில்வித்தை அணிகள் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணம், சிகிதா தானிபர்த்தி, பிரித்திகா பிரதீப் கூட்டணி உலக சாதனையை சமன் செய்து சீனாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

வில்வித்தை கலப்பு இரட்டையர் தங்கம்: காம்பவுண்ட் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிகிதா தானிபர்த்தி - சாஹில் ஜாதவ் ஜோடி, தென்கொரிய அணியை ஷூட்-ஆஃபில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.

துப்பாக்கி சுடுதலில் புதிய சாதனை தங்கம்: டிராப் கலப்பு அணிகள் பிரிவு துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் நீரு தண்டா - கைனன் செனாய் ஜோடி புதிய ஆசிய சாதனை படைத்து இந்தியாவுக்கு 9வது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தது.

வில்வித்தை ஆடவர் அணி தங்கம்: ஆடவர் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் குஷால் தலால், சாஹில் ஜாதவ் மற்றும் கணேஷ் மணி ரத்னம் திருமூரு கூட்டணி சீனாவை 238-237 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் 10வது தங்கப் பதக்கத்தை உறுதி செய்தது.

வெண்கலப் பதக்கங்கள்

குத்துச்சண்டையில் மகளிர் 60 கிலோ எடைப்பிரிவில் பிரியா கங்காஸ், ஆடவர் 90 கிலோ பிரிவில் கபில் பொகாரியா ஆகியோர் அரையிறுதியில் போராடி வெண்கலப் பதக்கங்களை வென்றனர். மல்யுத்தத்தில் ஆடவர் கிரேக்க ரோமன் 87 கிலோ எடைப்பிரிவில் சுனில் குமார் வெண்கலப் பதக்கப் போட்டியில் பிலிப்பைன்ஸ் வீரரை 9-0 என வீழ்த்தி வெண்கலம் வென்றார்.

பதக்கப் பட்டியல் நிலவரம்

ஒரே நாளில் 4 தங்கம், 3 வெண்கலம் என பதக்கங்களை அள்ளியதன் மூலம் இந்தியா 12வது இடத்திலிருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியா 10 தங்கம், 21 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களுடன் 8வது இடத்தில் உள்ளது.

டாப் 10 நாடுகள் பட்டியல்:

  1. சீனா - 151 தங்கம், 67 வெள்ளி, 59 வெண்கலம் (மொத்தம் 277)
  2. ஜப்பான் - 50 தங்கம், 77 வெள்ளி, 73 வெண்கலம் (மொத்தம் 200)
  3. தென் கொரியா - 24 தங்கம், 30 வெள்ளி, 49 வெண்கலம் (மொத்தம் 103)
  4. உஸ்பெகிஸ்தான் - 16 தங்கம், 19 வெள்ளி, 19 வெண்கலம் (மொத்தம் 54)
  5. தாய்லாந்து - 12 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலம் (மொத்தம் 34)
  6. ஈரான் - 11 தங்கம், 16 வெள்ளி, 12 வெண்கலம் (மொத்தம் 39)
  7. பஹ்ரைன் - 11 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் (மொத்தம் 21)
  8. இந்தியா - 10 தங்கம், 21 வெள்ளி, 29 வெண்கலம் (மொத்தம் 60)
  9. கஜகஸ்தான் - 9 தங்கம், 16 வெள்ளி, 31 வெண்கலம் (மொத்தம் 56)
  10. வட கொரியா - 7 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் (மொத்தம் 20)
2 செஞ்சுரி.. சுப்மன் கில், ரோஹித் சர்மா மரண அடி.. அரண்டு போன வெஸ்ட் இண்டீஸ்.. 405 அடிச்சும் வேஸ்ட்

2 செஞ்சுரி.. சுப்மன் கில், ரோஹித் சர்மா மரண அடி.. அரண்டு போன வெஸ்ட் இண்டீஸ்.. 405 அடிச்சும் வேஸ்ட்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மீதமுள்ள போட்டிகளிலும் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி பதக்கப் பட்டியலில் மேலும் முன்னேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, October 1, 2026, 0:20 [IST]
Other articles published on Oct 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+