For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டு: பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலம்.. திவ்யா காக்ரன் கலக்கல்

ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

By Shyamsundar

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

இந்தோனேசியாவில் தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலத்துடன் தற்போது 7வது இடத்தில் உள்ளது.

India won 10 medal after Divya Kakran won bronze in women wrestling

இந்த நிலையில் இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் 68 கிலோ எடைப் பிரிவில் பெண்கள் மல்யுத்தம் நடந்தது. மிகவும் வலுவான தாய்லாந்து வீராங்கனை சென் வென்லிங்கை இந்தியா வீராங்கனை திவ்யா காக்ரன் எதிர்கொண்டார்.

நீண்ட நேரம் நடைபெற்ற இந்த போட்டியில் வீராங்கனை திவ்யா காக்ரன் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்தார். இந்த நிலையில் கடைசி நேரத்தில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி திவ்யா காக்ரன் வென்றார்.

[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]

இந்திய வீராங்கனை திவ்யா காக்ரன் வெண்கலப் பதக்கம் வென்றார். தாய்லாந்து வீராங்கனை சென் வென்லிங்கை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி அபாரமாக பதக்கம் வென்றார். இதனால் பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

Story first published: Tuesday, August 21, 2018, 17:56 [IST]
Other articles published on Aug 21, 2018
English summary
India won 10 medal after Divya Kakran won bronze in women wrestling.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+