Asian Games 2023 : 1 தங்கம், 2 வெள்ளி வென்ற இந்தியா.. பட்டியலில் நான்காம் இடம்!
ஹாங்சோ : 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தொடர்ந்து பதக்கம் வென்று வருகிறது.
இன்று (அக்டோபர் 1ஆம் தேதி) இந்தியா துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்றது. கோல்ஃப் விளையாட்டில் இந்தியா ஒரு வெள்ளி வென்றது.

ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ட்ராப் அணிப் பிரிவில் இந்தியாவின் பிருத்விராஜ் தொண்டைமான், ஜோரவர் சிங் சந்து மற்றும் கினான் டேரியஸ் சென்னாய் ஆகியோர் 361 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்து தங்கம் வென்றனர். இது இந்தியாவின் 11வது தங்கம் ஆகும்.
துப்பாக்கி சுடுதல் பெண்கள் டிராப் 50 அணிப் பிரிவில் மணீஷா கீர், பிரீத்தி ராஜக், குமாரி ராஜேஷ்வரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது.
கோல்ப் பெண்கள் தனிநபர் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் 271 புள்ளிகள் பெற்று பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மேலும், துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. ஆடவர் ட்ராப் தனிநபர் இறுதிப் போட்டியில் கினான் டேரியஸ் செனாய் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவர் 40க்கு 32 மதிப்பெண்களைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
இதுவரை இந்திய அணி 42 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இதுவரை 11 தங்கம், 16 வெள்ளி, 15 வெண்கலம் வென்றுள்ளது இந்தியா.


Click it and Unblock the Notifications