For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டு : மகளிர் ஹெப்டாத்லானில் ஸ்வப்னா தங்கம்..இந்தியாவின் 150வது ஆசிய போட்டி தங்கம்

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தன் 150வது தங்கத்தை வென்று இருக்கிறது. மகளிர் ஹெப்டாத்லான் போட்டியில் பங்கேற்ற ஸ்வப்னா பர்மன் தங்கம் வென்றார். இது 2018 ஆசிய விளையாட்டின் 11வது தங்கமாகும்.

ஹெப்டாத்லான் என்பது ஏழு போட்டிகளை உள்ளடக்கியது. அதில் 100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், ஷாட் புட், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

India won its 150th asian games gold today, after Swapna Barman won Heptathlon

இந்தியா சார்பில் இந்த போட்டியில், ஸ்வப்னா பர்மன் மற்றும் ஹெம்ப்ராம் பூர்ணிமா பங்கேற்றனர். இதில் ஒவ்வொரு போட்டியிலும் எடுக்கும் புள்ளிகளை கணக்கிட்டு இறுதியில் வெற்றியாளர் நிர்ணயிக்கப்படுவார். அந்த வகையில், ஸ்வப்னா பர்மன் 6026 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தார்.

சீனாவின் வாங் கிங்க்ளிங் 5954 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடமும், ஜப்பானின் 5873 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தர். இந்தியாவின் ஹெம்ப்ராம் பூர்ணிமா 5837 புள்ளிகள் பெற்று வெண்கலத்தை தவறவிட்டார்.

இன்று ட்ரிபுள் ஜம்ப்பில் இந்தியாவின் அர்பிந்தர் சிங் தங்கம் வென்றார். தொடர்ந்து ஒரே நாளில், இரண்டு தடகள வீரர்கள் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

Story first published: Wednesday, August 29, 2018, 20:02 [IST]
Other articles published on Aug 29, 2018
English summary
India won its 150th asian games gold today, after Swapna Barman won Heptathlon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+