For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டு: செபக்டக்ராவ் போட்டியில் முதல் முறையாக பதக்கம்…. வெண்கலம் வென்ற இந்தியா

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு செபக்டக்ராவ் என்ற அதிகம் அறியப்படாத ஒரு விளையாட்டில் வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இதோடு சேர்த்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு செபக்டக்ராவில் பதக்கம் கிடக்கும் வாய்ப்பு நேற்றே உறுதியானது. அதை அடுத்து இன்று நடந்த அரையிறுதியில் தாய்லாந்து அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணி வெண்கலம் வென்றது.

India won ninth medal after Sepaktakraw won bronze

ஒரு வேளை இந்தப் போட்டியில் வென்று இருந்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வெள்ளி அல்லது தங்கம் வெல்லும் வாய்ப்பை பெற்று இருக்கலாம். எனினும், தாய்லாந்து அணி திறமையாக ஆடியதால் இந்தியா 0-2 என இந்த போட்டியில் தோல்வி அடைந்தது.

[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]

இந்த வெண்கலப் பதக்கம் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன் முறையாக செபக்டக்ராவில் இந்தியா பதக்கம் வென்று உள்ளது. இதுவரை இந்தியா மூன்று தங்கம், மூன்று வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் வென்று இருக்கிறது.

Story first published: Tuesday, August 21, 2018, 15:40 [IST]
Other articles published on Aug 21, 2018
English summary
India won ninth medal after Sepaktakraw won bronze after a 0-2 lose to Thailand.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+