தேசத்தை பெருமைப்படுத்திய இளம் சிங்கங்கள்.. உலக இளையவர் வில்வித்தை.. பதக்க வேட்டை நடத்திய இந்திய அணி
போலாந்து: உலக இளையோர் வில்வித்தைப் போட்டியில் இந்தியா இன்று பதக்க வேட்டை நடத்தி உள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் வில்வித்தைக்கான அடுத்த முக்கிய போட்டியாக உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

போலந்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இன்று நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆடவர், கலப்புக்குழு மற்றும் மகளிர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்தியா கலந்துக்கொண்டுள்ளது.
போலந்து நாட்டின் ரோக்லா நகரில் உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா இதுவரை இல்லாத வகையில் 3 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. வில்வித்தையில் பலமாக பார்க்கக்கூடிய சீனா மற்றும் கொரியா நாட்டு வீரர், வீராங்கனைகள் இதில் கலந்துக்கொள்ளவில்லை. இதனால் இந்தியாவின் ஆதிக்கமே தொடர் முழுவதும் இருந்தது.

இதில் ஆடவர், கலப்புக்குழு மற்றும் மகளிர் பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்றது. குறிப்பாக மகளிருக்கான காம்பவுண்ட் கேடட் பிரிவில் இந்திய வீராங்கனைகள் பிரணீத் கவுர், பிரியா குர்ஜார் மற்றும் ரிதுவர்ஷினி செந்தில்குமார் ஆகிய மூவரும் இறுதிச்சுற்றில் 228-216 என்ற புள்ளிகள் கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றனர்.
இவர்கள் மூவரும் தகுதிச் சுற்றில் அணியாக மொத்தமுள்ள 2160 புள்ளிகளுக்கு 2067 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தனர். இந்தப் பிரிவில் அமெரிக்க வீராங்கனைகள் 2045 புள்ளிகள் பெற்றதே முந்தைய உலக சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை இந்திய வீராங்கனைகள் முறியடித்தனர்.

இந்திய வீராங்கனை பிரியா குர்ஜார், குழுவு பிரிவுக்கான தகுதிச்சுற்றில் புதிய உலக சாதனைப்படைத்திருந்தார். ஆனால் தனிநபர் பிரிவில் அவரால் வெள்ளிப்பதக்கம் மட்டுமே வெல்ல முடிந்தது. இறுதி சுற்றில் சேலின் ரோட்ரிக்யிஸிடம் 136 - 139 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்தார்.
இதே போல ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பன்ரீத் இங்கிலாந்தின் ஹாலீ ,போல்டன் என்பவரை 140 - 135 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இதன் மூலம் இறுதியில் இந்தியா 5 பதக்கங்களுடன் பெருமை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications