Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்: 37வது இடத்தைப் பிடித்து இந்திய லூஜ் வீரர் படுதோல்வி

Indian athlete Sivakesaven lost his hope in winter Olympic..
சோச்சி: ரஷ்யாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் சிவகேசவன் தோல்வியைத் தழுவியுள்ளார்.

ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2014 நடந்து வருகிறது. இது 22வது ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பங்கேற்ற இந்திய வீரர் சிவகேசவனால் 37வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

இந்தியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் சங்க தேர்தல் குளறுபடிகளால்,இந்திய வீரர்கள் ஒலிம்பிக் கொடியுடனே பங்கேற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், "லூஜ்" விளையாட்டில் பங்கேற்ற இந்திய வீரர் சிவகேசவன்,அப்போட்டியின் நான்கு சுற்றுகளிலும் சரியாக விளையாடாததால் தோல்வியடைந்தார். இதில், சிவகேசவனுக்கு 37வது இடமே கிடைத்தது.

இம்முறை லூஜ் போட்டியில் 39வீரர்களே பங்கேற்ற நிலையில் சிவகேசவனின் இந்த தோல்வி,குளிர்கால ஒலிம்பிக்கில் இந்தியாவின் மோசமான தோல்வியாக அமைந்து விட்டது.

Story first published: Tuesday, February 11, 2014, 19:20 [IST]
Other articles published on Feb 11, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+