Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு பொண்ணை லவ் பண்றேன்…! அவரை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்..! ஷாக் கிளப்பிய இந்திய தடகள வீராங்கனை

புவனேஸ்வர்:பிரபல இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையான துத்தி சந்த், பெண் ஒருவரை காதலித்து வருவதாக தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் துத்தி சந்த். கடந்தாண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, 2 வெள்ளிப்பதக்கங்களை நாட்டுக்காக வென்று கொடுத்தவர். 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட பாலின பரிசோதனை அவருக்கு பேரிடியாக அமைந்தது.

Indian athletic dutee chand declares that she is in same sex relationship

துத்தி சந்துக்கு ஆண்மைத்தன்மை இருப்பதாக கூறி போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. பின்னர் 2015ம் ஆண்டு அவர் மீதான தடை விலக்கி கொள்ளப்பட்டது.

அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக அவர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந் நிலையில், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக துத்தி சந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறியதாவது: நான் எனக்கான துணையை தேடிக்கொண்டேன். எனது ஊரான சக்காபுரியிலேயே சில ஆண்டுகளுக்கு முன் பெண் ஒருவர் அறிமுகமானார். அவரை நான் காதலித்து வருகிறேன்.

எதிர்காலத்தில் நான் அந்தப்பெண்ணுடன் வாழ விரும்புகிறேன். தன்பாலின உறவை நான் எப்போதும் ஆதரித்து வந்துள்ளளேன். தற்போது எனது கவனம் முழுவதும் சர்வ தேச மற்றும் ஒலிம்பிக் போட்டியின் மீதே உள்ளது.

எனது முடிவை யாராலும் மாற்ற முடியாது. இவை அனைத்தும் தனிப்பட்ட முடிவு. இன்னும் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள முடியும் என்றார்.

Story first published: Sunday, May 19, 2019, 15:38 [IST]
Other articles published on May 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+