For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்கில் கலக்க காத்திருக்கும் 118 இந்திய வீரர், வீராங்கனைகள்.. யார், யார்? முழு விவரம்

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் 118 வீரர்-வீராங்கனைகள் அடங்கிய இந்தியக் குழு பங்கேற்கிறது. அந்த 118 பேர் கொண்ட இந்தியக் குழுவில் உள்ள வீரர்-வீராங்கனைகள் யார் என தெரிந்து கொள்ளலாம்.

31-வது ஒலிம்பிக்ஸ் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4:30 மணிக்கு ஒலிம்பிக்ஸ் தொடங்குகிறது. ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் 118 வீரர்-வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்தியக் குழு 15 விளையாட்டுகளில் கலந்து கொள்கிறது.

100-க்கும் மேற்பட்டோர் அடங்கிய இந்தியக் குழு ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொள்வது என்பது இது தான் முதல்முறை என்பது சிறப்பு. இந்தியக் குழுவிற்கு துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தலைமை தாங்கி அணிவகுப்பில் கொடியேந்தி செல்கிறார்.

கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பில் 83 வீரர்-வீராங்கனைகள் 13 விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். அதில் இந்திய அணி 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கம் வென்றது. இந்நிலையில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதற்காக இந்தியா சார்பில் இந்த முறை அதிக வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

வரவேற்பு

வரவேற்பு

தேசிய கொடியேற்றுதல் மற்றும் இந்திய அணிக்கு அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய வீரர்-வீராங்கனைகள் உற்சாகமாக செல்பி எடுத்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தற்போது ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகள் விவரம் குறித்து பார்க்கலாம்:

வில்வித்தை

வில்வித்தை

வில்வித்தையின் ஆடவர் பிரிவில் அதானு தாஸ் (ரிகர்வ் தனிநபர் பிரிவு) கலந்து கொள்கிறார். இதேபோல, மகளிர் பரிவில் தீபிகா குமாரி, பாம்பய்லா தேவி, லட்சுமி ராணி (ரிகர்வ் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவு) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தடகளப் போட்டிகள் - ஆண்கள்

தடகளப் போட்டிகள் - ஆண்கள்

தடகளப் போட்டியில் ஆடவர் பிரிவில், முகமது அனாஸ் (400 மீட்டர் ஓட்டம்), ஜின்சன் ஜான்சன் (800 மீட்டர் ஓட்டம்), அங்கித் ஷர்மா (நீளம் தாண்டுதல்), ரஞ்சித் மகேஸ்வரி (டிரிபிள்ஜம்ப்), விகாஸ் கவுடா (வட்டு எறிதல்), தோனாகல் கோபி, கேதா ராம், நிதேந்திர சிங் ராவத் (3 பேரும் மாரத்தான்), கணபதி, மனிஷ்சிங், குர்மீத்சிங் (20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), சந்தீப் குமார், மனிஷ் சிங் (50 கிலோ மீட்டர் நடைபந்தயம்), முகமது அனாஸ், தருண், குன்கு முகமது, ஆரோக்ய ராஜீவ், மோகன்குமார், லலித் மாத்தூர் (6 பேரும் 400 மீட்டர் தொடர் ஓட்டம்) உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

தடகளப் போட்டிகள் - மகளிர்

தடகளப் போட்டிகள் - மகளிர்

தடகளப் போட்டியில் பங்கேற்கும் மகளிர் பிரிவில், டுட்டி சந்த் (100 மீட்டர் ஓட்டம்), ஸ்ரபானி நந்தா (200 மீட்டர் ஓட்டம்), நிர்மலா ஷெரோன் (400 மீட்டர் ஓட்டம்), டின்டு லூக்கா (800 மீட்டர் ஓட்டம்), லலிதா பாபர், சுதாசிங் (2 பேரும், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), மன்பிரீத் கவுர் (குண்டு எறிதல்), சீமா அன்டில் (வட்டு எறிதல்), ஜெய்ஷா, கவிரா ராவுத் (2 பேரும் மாரத்தான்), குஷ்பிர் கவுர், சப்னா பூனியா (2 பேரும், 20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), அஸ்வினி அகுன்ஜி, தேபஸ்ரீ மஜூம்தார், ஜிஸ்னா மேத்யூ, பூவம்மா, நிர்மலா ஷெரோன், அனில்டா தாமஸ் (6 பேரும், 400 மீட்டர் தொடர் ஓட்டம்). உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

பேட்மிண்டன்

பேட்மிண்டன்

பேட்மிண்டன் போட்டின் ஆடவர் பிரிவில், ஸ்ரீகாந்த் (ஒற்றையர்), மனு அட்ரி-சுமித் ரெட்டி ( இரட்டையர்) ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதேபோல, மகளிர் பரிவில், சாய்னா நேவால், பி.வி. சிந்து (ஒற்றையர்), ஜூவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா (இரட்டையர்) பங்கேற்கின்றனர்.

குத்துச்சண்டை

குத்துச்சண்டை

குத்துச்சண்டை ஆடவர் பிரிவில் ஷிவதபா (பாந்தம் வெயிட் பிரிவு), மனோஜ்குமார் (லைட் வெல்டர் வெயிட்), விகாஸ் கிருஷ்ணன் (மிடில் வெயிட்) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

கோல்ப்

கோல்ப்

கோல்ப் போட்டியில் ஆடவர் பிரிவில் அனிர்பன் லஹிரி, ஷிவ் சவ்ராசியா ஆகியோர் பங்கேற்கின்றனர். மகளிர் பிரிவில் அதிதி அசோக் கலந்து கொள்கிறார்.

ஜிம்னாஸ்டிக்ஸ்

ஜிம்னாஸ்டிக்ஸ்

ஜிம்னாஸ்டிக் போட்டியின் மகளிர் பிரிவில் திபா கர்மாகர் (ஆர்டிஸ்டிக் தனிநபர் ஆல்-ரவுண்ட் பிரிவு) கலந்து கொள்கிறார்.

ஜூடோ

ஜூடோ

ஜூடோ போட்டியின் ஆடவர் பிரிவில் அவ்தார்சிங் (90 கிலோ உடல் எடைப்பிரிவு) கலந்து கொள்கிறார்.

துடுப்பு படகு

துடுப்பு படகு

துடுப்பு படகு போட்டியின் ஆடவர் பிரிவில் டட்டு பாபன் போகனல் (சிங்கிள் ஸ்கல்ஸ்) கலந்து கொள்கிறார்

துப்பாக்கிச் சுடுதல்

துப்பாக்கிச் சுடுதல்

துப்பாக்கிச் சுடுதல் ஆடவர் பிரிவில் அபினவ் பிந்த்ரா (10 மீட்டர் ஏர் ரைபிள்), பிரகாஷ் நஞ்சப்பா (50 மீட்டர் பிஸ்டல்), ககன் நரங் (10 மீட்டர் ஏர் ரைபிள், 50 மீட்டர் ரைபிள் புரோன், 50 மீட்டர் ரைபிள் 3 நிலை), ஜிது ராய் (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 50 மீட்டர் பிஸ்டல்), செயின்சிங் (50 மீட்டர் ரைபிள் புரோன், 50 மீட்டர் ரைபிள் 3 நிலை), குர்பிரீத்சிங் (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல்), மனவ்ஜித் சிங் சந்து, கைனன் செனாய் (இருவரும் டிராப்), மைராஜ் அகமது கான் (ஸ்கீட்) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதேபபோல மகளிர் பிரிவில், அபூர்வி சன்டிலா, அயோனிகா பால் (2 பேரும் 10 மீட்டர் ஏர் ரைபிள்), ஹீனா சித்து (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல்) ஆகியோர் பங்கேற்கின்றனர்.

நீச்சல்

நீச்சல்

நீச்சல் போட்டியின் ஆடவர் பிரிவில் சஜன் பிரகாஷ் (200 மீட்டர் பட்டர்பிளை) மற்றும் மகளிர் பிரிவில் ஷிவானி கட்டாரியா (200 மீட்டர் பிரீஸ்டைல்) ஆகியோர் பங்கேற்கின்றனர்.

டேபிள் டென்னிஸ்

டேபிள் டென்னிஸ்

டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் சரத்கமல், சவுமியாஜித் கோஷ் ( 2 பேரும், ஒற்றையர்) மற்றும் மகளிர் பிரிவில் மவுமா தாஸ், மானிகா பத்ரா (2 பேரும், ஒற்றையர்) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

டென்னிஸ்

டென்னிஸ்

டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் ரோகன் போபண்னா-லியாண்டர் பெயஸ் (இரட்டையர்), மகளிர் பிரிவில் சானியா மிர்சா-பிராத்தனா தோம்ப்ரே (இரட்டையர்) பங்கேற்கின்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா-ரோகன் போபண்ணா கலந்து கொள்கின்றனர்.

பளுதூக்குதல்

பளுதூக்குதல்

பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் சதீஷ்குமார் (77 கிலோ பிரிவு) மற்றும் மகளிர் பிரிவில் மீராபாய் சானு (48 கிலோ பிரிவு) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மல்யுத்தம்

மல்யுத்தம்

மல்யுத்தம் பிரீஸ்டைல் ஆடவர் பிரிவில் சந்தீப் தோமர் (57 கிலோ பிரிவு), யோகேஷ்வர் தத் (65 கிலோ பிரிவு), நார்சிங் யாதவ் (74 கிலோ பிரிவு) மற்றும் கிரீகோ ரோமன் ஆடவர் பிரிவில் ரவிந்தர் காத்ரி (85 கிலோ பிரிவு), ஹர்தீப்சிங் (98 கிலோ பிரிவு) பங்கேற்கின்றனர்.

மல்யுத்தம் பிரீஸ்டைல் மகளிர் பிரிவில் வினேஷ் போகத் (48 கிலோ பிரிவு), பபிதா குமாரி (53 கிலோ பிரிவு), சாக்ஷி மாலிக் (58 கிலோ பிரிவு) கலந்து கொள்கின்றனர்.

ஆடவர் ஹாக்கி அணி

ஆடவர் ஹாக்கி அணி

ஆடவர் ஹாக்கி அணியில், ஸ்ரீஜேஷ் (கேப்டன் மற்றும் கோல்கீப்பர்), சுரேந்தர்குமார், டேனிஷ் முஜ்தபா, ரகுநாத், ஆகாஷ்தீப்சிங், சிங்லென்சனாசிங், ஹர்மன்பிரீத்சிங், கோதாஜித்சிங், மன்பிரீத்சிங், ரமன்தீப்சிங், ரூபிந்தர்பால்சிங், சர்தார்சிங், எஸ்.வி.சுனில், நிகின் திம்மையா, உத்தப்பா, தேவிந்தர் வால்மிகி ஆகியோர் அடங்கிய அணி பங்கேற்கிறது.

மகளிர் ஹாக்கி அணி

மகளிர் ஹாக்கி அணி

மகளிர் ஹாக்கி அணியல், சுசிலா சானு (கேப்டன்), சவிதா பூனியா, தீப் கிரேஸ் எக்கா, தீபிகா தாகூர், நமிதா தோப்போ, சுனிதா லக்ரா, லிலிமா மின்ஸ், ரேணுகா யாதவ், நிக்கி பிராத்தன், மோனிகா மாலிக், நவ்ஜோத் கவுர், அனுராதா தேவி, பூனம் ராணி, வந்தனா கட்டாரியா, பிரீத்தி துபேய், ராணி ராம்பால் ஆகியோர் அடங்கிய அணி பங்கு கொள்கிறது.

Story first published: Friday, August 5, 2016, 13:48 [IST]
Other articles published on Aug 5, 2016
English summary
The Indians are eyeing their first ever double-digit medal haul riding on the sheer number of qualifiers for Rio olympic 2016, standing at 118 now.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+