Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாதிப்பாரா அதிதி அசோக்? "சர்பிரைஸ்" மெடல் கிடைக்குமா? - போர்க்களமாகும் கோல்ஃப் களம்

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மற்றொரு மெடல் நம்பிக்கையை விதைத்திருக்கிறார் கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக்.

ஒலிம்பிக் தொடரில் பெண்கள் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே பிரிவில் சர்வதேச ரேங்கிங்கில் முதல்நிலை வீராங்கனையான அமெரிக்காவின் NELLY KORDA-வுக்கு அடுத்த இடத்தை, அதாவது இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார் அதிதி.

மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிளேவில் NELLY முதல் இடம் பிடிக்க, அதிதி இரண்டாவது இடம் பிடித்துள்ளார். முதல் மூன்று ரவுண்டுகளில் இருந்தே விட்டுவிடாமல் அதிதி இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

 பதக்கம் உறுதியாகுமா?

பதக்கம் உறுதியாகுமா?

இந்நிலையில், நாளை அதிகாலை 4:48 மணிக்கு தொடங்கும் நான்காவது ரவுண்டிலும் அவர் அதே இடத்தை, தக்க வைத்துக் கொண்டால் அதிதி பதக்கம் வெல்வது உறுதியாகிவிடும். இந்தியாவுக்கு மற்றொரு மெடல் உறுதியாகிவிடும். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த அதிதி, 5 வயதில் இருந்தே கோல்ஃப் விளையாடி வருகிறார். படிப்பு ஒருபக்கம் இருந்தாலும், கோல்ஃப் மீதான அவரது குறையவில்லை. ஒருக்கட்டத்தில் கோல்ஃப் விளையாட்டை தனது புரஃபஷனலாக தேர்ந்தெடுத்துக் கொண்டார் அதிதி. அதன் பிறகு இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் விளையாடி பல வெற்றிகளை குவித்தார்.

 2ம் இடம்

2ம் இடம்

ஆசிய இளையோர் விளையாட்டு (2013), இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு (2014), ஆசிய விளையாட்டு (2014) மற்றும் ரியோ ஒலிம்பிக் (2016) என பல போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்ற முதல் கோல்ஃப் விளையாட்டு வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். அதே நேரத்தில் அவர் தொழில்முறையாக 5 டூர்களில் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக LPGA டூர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். கடந்த முறை ரியோ ஒலிம்பிக்கில் 41-வது இடத்தை பிடித்த அதிதி, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே பிரிவில் முதல் மூன்று செட்களில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தி இருக்கிறார்.

 இனிமேல் பேசுவார்கள்

இனிமேல் பேசுவார்கள்

இந்த ஒலிம்பிக்கில் அவரது Caddie-யாக (கோல்ஃப் விளையாட்டு உபகரணங்களை வீரருக்காக சுமந்து செல்பவர்) அவரது அம்மா தான் செயல்படுகிறார். ரியோ ஒலிம்பிக்கில் அவரது அப்பா அசோக், Caddie-யாக செயல்பட்டிருந்த நிலையில், இப்போது அம்மாவே மகளுக்காக களமிறங்கிவிட்டார். இந்த போட்டி குறித்து அதிதி அளித்துள்ள பேட்டியில், "இந்த போட்டியில் நிச்சயமாக அழுத்தம் இருக்கும். ஆனால் நான் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. அடுத்த சுற்றில் நான் எப்படி விளையாடினாலும், இந்திய மக்கள் கோல்ஃப் பற்றி இனிமேல் பேசுவார்கள் என்று நினைக்கிறேன்.

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

எனது செயல்பாட்டினால் இந்தியாவில் இந்த விளையாட்டு மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விளையாட்டாக மாறியுள்ளதே எனக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன். ஏனென்றால் நான் முதல் மூன்று இடங்களில் இருக்கிறேன். மற்ற விளையாட்டுகளையும் போல் மக்கள் கோல்ஃப் விளையாட்டையும் பார்ப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். விளையாட்டைப் பற்றி அதிகமான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது எப்போதும் நல்லது. இது சிறந்த வருடங்களில் ஒன்று என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இந்திய கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், கோல்ஃப் விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச ரோலக்ஸ் தரவரிசையில் இப்போதைக்கு 200-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒலிம்பிக்கில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தனது ஆட்டத்தை, திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மெடலை அடிச்சுட்டு வாங்க அதிதி!

Story first published: Friday, August 6, 2021, 22:54 [IST]
Other articles published on Aug 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+