ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தொடர் தோல்வி... இந்திய வீராங்கனை ஹீனா வெளியேற்றம்!
ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் மகளிர் 25 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டிகளின் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து வெளியேறினார்.
மகளிருக்கான 25 மீட்டர் 'ப்ரிஷின்' துப்பாககிச் சுடும் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிள் இன்று நடைபெற்றன. இதில் இந்தியாவின் சார்பில் ஹீனா சிந்து பங்குபெற்றார்.

மூன்று சுற்றுகளின் முடிவில் அவர் 286 புள்ளிகளை மட்டும் பெற்றார். இதன் மூலம் 30வது இடத்தினை மட்டுமே அவரால் பிடிக்க முடிந்தது. இதனால் போட்டியில் இருந்தும் அவர் வெளியேறினார்.
Story first published: Wednesday, August 10, 2016, 1:02 [IST]
Other articles published on Aug 10, 2016


Click it and Unblock the Notifications