Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தள்ளி நின்னாதானே "கேட்ச்" பிடிக்க முடியும், இப்படியா நெருக்கியடிச்சு நிப்பீங்க. லட்சுமண் விளாசல்!

லண்டன்: இந்திய அணியினர் ஸ்லிப்பி்ல கேட்ச்சுகளை கோட்டை விடுவது பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தற்போது முன்னாள் டெஸ்ட் ஜாம்பவான் வி.வி.எஸ். லட்சுமணும் ஸ்லிப்பில் கேட்ச்சுகளை கோட்டை விடுவதை விமர்சித்துள்ளார்.

ஏற்கனவே கவாஸ்கரும் ஸ்லிப்பில் கேட்ச்சுகளை நம்மவர்கள் தொடர்ந்து கோட்டை விட்டு வருவதை விமர்சித்திருந்தார். பல முன்னாள் வீரர்களும் கூட இதை விமர்சித்திருந்தனர்.

பேஸ்புக்கிலோ இதை கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர் ரசிகர்களும். இந்த நிலையில் ஸ்லிப்பில் இந்தியர்கள் ஏன் கேட்ச்சுகளை கோட்டை விடுகிறார்கள் என்பது குறித்து விளக்கியுள்ளார் லட்சுமண்.

வெண்ணை வெட்டிச் சிப்பாய்க!

வெண்ணை வெட்டிச் சிப்பாய்க!

இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிகளில் ஸ்லிப்பில் தொடர்ந்து நமது வீரர்கள் கேட்ச் பிடிக்கத் தவறி வருகின்றனர். திரும்பத் திரும்ப இது நடந்து வருகிறது. கையில் சிக்கும் பந்தை சைஸாக அவர்கள் கோட்டை விட்டு விடுகின்றனர்.

"ஸ்லிப் ஸ்பெஷலிட்" சொல்லும் யோசனை

இந்த பஞ்சாயத்து குறித்து ஸ்லிப் கேட்ச்சுகளில் நிபுணரான விவிஎஸ் லட்சுமண் விளக்கியுள்ளார். சில திருத்தங்களையும் அவர் கூறியுள்ளார்.

இப்படியா நெருக்கியடிச்சு நிற்பது...

இப்படியா நெருக்கியடிச்சு நிற்பது...

ஸ்லிப்பில் மிக மிக நெருக்கமாக வீரர்கள் நிறுத்தப்படுகிறர்கள். இதனால்தான் யார் பிடிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டு கடைசியில் கேட்ச் மிஸ் ஆகி விடுகிறது.

நல்லாத் தள்ளி நில்லுங்கப்பா

நல்லாத் தள்ளி நில்லுங்கப்பா

இந்தியாவில் விளையாடும்போது ஆறு காலடி தூரம் என்ற அளவில் முதல், 2வது மற்றும் 3வது ஸ்லிப்புகளுக்கு இடையிலான இடைவெளி இருக்கலாம். ஆனால் வெளிநாடுகளில் ஆடும்போது பந்துகளில் பவுன்ஸ் அதிகம் இருக்கும். எனவே இதை 7 அல்லது 8 காலடி தூரமாக அதிகரித்துக் கொள்ள வேண்டும். இங்கு நிற்பது போல அங்கு நிற்கக் கூடாது.

'டிஸ்டன்ஸ்'தான் பிராப்ளம்...!

'டிஸ்டன்ஸ்'தான் பிராப்ளம்...!

எனவே இங்கிலாந்திலும் கூட இந்த டிஸ்டன்ஸ்தான் பிரச்சினையாகியுள்ளது. இதை அதிகரிக்க வேண்டும். ஆனால் தற்போது மிக மிக நெருக்கமாக வீரர்கள் நிறுத்தப்படுகிறார்கள். இதனால் பந்தை பிடிப்பது யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டு கேட்ச் நழுவிப் போய் விடுகிறது.

ஸ்லிப் ரொம்ப முக்கியம் அமைச்சரே!

ஸ்லிப் ரொம்ப முக்கியம் அமைச்சரே!

பேட்டிங் மற்றும் பவுலிங்கைப் போலவே இந்த ஸ்லிப் பீல்டிங்கும் மிக முக்கியமானது. இங்குதான் நிறையப் பேரை எளிதாக அவுட் செய்ய முடியும். ஆனால் சற்று கவனமாக இருப்பது அவசியம். நம்பிக்கை அதிகம் தேவை.

நம்பிக்கையே இல்லாத வீரர்கள்

நம்பிக்கையே இல்லாத வீரர்கள்

ஆனால் தற்போது ஸ்லிப்புகளில் நிறுத்தப்படும் வீரர்களிடையே நம்பிக்கை இல்லாதது போல தெரிகிறது அல்லது குறைவாக உள்ளது. அது மாற வேண்டும். நிச்சயம் அவர்களால் கேட்ச் செய்யமுடியும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

முரளி விஜய் - ரஹானே பரவாயில்லை

முரளி விஜய் - ரஹானே பரவாயில்லை

முரளி விஜய், அஜிங்கியா ரஹானே ஆகியோர் நல்ல ஸ்லிப் பீல்டர்கள் அதை அவர்கள் இந்தத் தொடரில் காட்டியுள்ளனர். ஆனால் அதை அவர்கள் அதிகரிக்க வேண்டும், முழுமையாக்க வேண்டும் என்றார் லட்சுமண்.

லட்சுமண் -டிராவிட்

லட்சுமண் -டிராவிட்

இந்திய அணியின் ஸ்லிப் பீல்டர்களில் முக்கியமானவர்களாக திகழ்ந்தவர்கள் லட்சுமணும், டிராவிடும். இருவருமே அபாரமான ஸ்லிப் பீல்டர்கள் ஆவர். ஆனால் அதற்குப் பின்னர் அந்த இடத்தை நிரப்ப சரியான ஆள் அமையவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

கையில் வெண்ணைய் -கண்ணில் விளக்கெண்ணெய்!

கையில் வெண்ணைய் -கண்ணில் விளக்கெண்ணெய்!

தற்போது இங்கிலாந்து போட்டிகளில், ஸ்லிப் கேட்ச்சுகளை கோட்டை விடுவதைப் பார்க்கும்போது கையில் வெண்ணையைத் தடவிக் கொண்டு, கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பீல்டிங்கில் வீரர்கள் ஈடுபடுவது போலவே ஒரு "ஃபீலிங்" வருவதைத் தவிர்க்க முடியவில்லை!

Story first published: Monday, August 18, 2014, 10:10 [IST]
Other articles published on Aug 18, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+