For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விர்தவால் காதே ஆசிய விளையாட்டில் சாதனை.. தேசிய ரெக்கார்டை முறியடித்தார்

ஜகார்த்தா : இந்திய நீச்சல் வீரர் விர்தவால் காதே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புதிய சாதனை புரிந்துள்ளார். 50 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டிகளில் தான் செய்த தேசிய சாதனையை, தானே முறியடித்துள்ளார். அதுவும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்த தேசிய சாதனையை அவர் நிகழ்த்தி இருப்பது மேலும் சிறப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடந்த 50 மீட்டர் பிரீஸ்டைல் இறுதிச் சுற்றில் 22.43 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து, இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

Indian swimmer Virdhawal Khade beat his own national record at Asian Games 2018.

முன்னதாக, ஆகஸ்ட் 20௦9 அன்று ஜப்பானில் நடந்த நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 22.52 வினாடிகளில் 50 மீட்டர் தூரத்தை கடந்து சாதனை புரிந்தார். இன்று வரை இதுவே தேசிய சாதனையாக உள்ளது. தற்போது தன் சாதனையை தானே முறியடித்து இருக்கிறார்.

எனினும், ஆசிய விளையாட்டின் 50 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் மூன்றாவது இடத்தையே பிடித்தார். முதல் இடத்தை சீனாவின் ஹெக்ஸின் யு 22.21 வினாடிகளிலும், இரண்டாம் இடத்தை ஹாங்காங்கின் 22.38 வினாடிகளிலும் பிடித்தனர்.

[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]

இந்த போட்டியின் பதக்கச் சுற்று இன்று மாலை நடைபெற உள்ளது. அதிலும், முதல் மூன்று இடங்களுக்குள் விர்தவால் காதே இடம் பிடித்தால், இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்கும்.

Story first published: Tuesday, August 21, 2018, 12:57 [IST]
Other articles published on Aug 21, 2018
English summary
Indian swimmer Virdhawal Khade beat his own national record at Asian Games 2018.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+