Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விமான நிலையத்திலேயே நிச்சயதார்த்தம்...தங்கம் வென்ற கையோடு காதலனை கைப்பிடித்தார் மல்யுத்த வீராங்கனை

டெல்லி : ஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகாட், டெல்லி விமான நிலையத்திற்கு வந்து இறங்கியவுடன் தன் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். அன்று அவரது பிறந்த நாள் 24வது பிறந்த நாள் என்பதால், அதையும் அவரது குடும்பத்தினருடன் கேக் வெட்டி விமான நிலையத்திலேயே கொண்டாடியுள்ளார்.

முன்னதாக, ஆசிய விளையாட்டில் மல்யுத்தப் பிரிவில் தங்கம் வென்றார் வினேஷ் போகாட். அவர் சென்ற ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்று இருந்ததால் அவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் தங்கம் வென்று, ஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெயரையும் பெற்றார்.

Indian women wrestling star Vinesh Phogat engaged at airport

அடுத்து கடந்த சனிக்கிழமை, நாடு திரும்பிய அவரை குடும்பத்தினர் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர். அன்று வினேஷுக்கு 24வது பிறந்த நாள் என்பதோடு, தங்கம் வென்ற மகிழ்ச்சியான நேரம் என்பதால் அவரது காதலர் சோம்விர் ரதி விமான நிலையத்திலேயே நிச்சயதார்த்தம் செய்ய முடிவெடுத்து இருக்கிறார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018

எனவே, குடும்பத்தினருடன் வினேஷின் பிறந்த நாளோடு, நிச்சயதார்த்தத்தையும் சேர்த்தே கொண்டாடிவிட்டனர். சோம்விர் ரதி தேசிய அளவில் கிரகோ ரோமன் மல்யுத்த பிரிவில் விளையாடி வரும் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து வருவதாக கூறியுள்ளார் வினேஷ்.

Story first published: Tuesday, August 28, 2018, 16:09 [IST]
Other articles published on Aug 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+