தென் ஆப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தும்: வி.வி.எஸ்.லட்சுமணன் நம்பிக்கை
டெல்லி: உலக கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திய இந்தியா தனது 2வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வரும் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ள போட்டியில் எதிர்கொள்ள உள்ளது.
இதுவரை உலக கோப்பை தொடர்களில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 முறை மோதியுள்ள இந்தியா மூன்றிலுமே வெற்றிபெற முடியவில்லை.

முதல் வெற்றிக்கு முத்தாய்ப்பு
எனவே வரும் ஞாயிற்றுக்கிழமை போட்டியின்போது, இந்த அவப்பெயருக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றிவாகை சூட இந்திய அணி தயாராகிவருகிறது. தென் ஆப்பிரிக்கா, பந்து வீச்சில் இந்தியாவைவிட மேம்பட்டு உள்ளது.

லட்சுமணன் நம்பிக்கை
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியை இந்தியாவால் வீழ்த்த முடியும் என்று முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமணன் கூறினார்,. இதுகுறித்து அவர் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி இந்திய வீரர்களின் நம்பிக்கையை அதிகரித்திருக்கும்.

வேகப்பந்தில் சிறந்தவர்கள்
தென் ஆப்பிரிக்காவின் வேகப் பந்து வீச்சுக்கு எதிராக விளையாடுவது என்பது எப்போதும் சவாலானது.

பேட்டிங் ஸ்டிராங்க்
ஆனாலும் இந்தியாவின் பேட்டிங் வரிசை, எந்த ஒரு பலம் வாய்ந்த பந்து வீச்சையும் சந்திக்கும் திறமை வாய்ந்தது. இதனால் தென்ஆப்பிரிக்காவை இந்தியாவால் வீழ்த்த முடியும். இந்திய பவுலர்களிடம் தன்னம்பிக்கை அதிகரித்து உள்ளது. இதை அவர்கள் செயல்படுத்த வேண்டும்.

பிளான் பண்ணி பண்ணுனா சரியாகிடும்
சரியான திட்டமிட்டு விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். எதிரணியின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications