For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 - பதக்க வேட்டையை தொடரும் இந்தியா!

ஹாங்சோ : 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா தொடர்ந்து பதக்கம் வென்று வருகிறது.

இந்தியா செப்டம்பர் 26 வரை 14 பதக்கங்களை வென்று இருந்தது. இந்த நிலையில், இன்று இதுவரை 6 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டு தங்கப் பதக்கங்களை இந்தியா வென்று இருக்கிறது. படகோட்டுதலில் ஒரு வெண்கலம் வென்றுள்ளது.

 Indias medal count going up on september 27 in Asian Games 2023

மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் குழு பிரிவில் சிஃப்ட் கவுர் சாம்ரா, ஆஷி சௌக்சே மற்றும் மனினி கௌசிக் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு சீனாவை முதல் இரண்டு சுற்றுகளில் முந்தி இருந்தனர். இறுதியில் அவர்கள் வெள்ளி வென்றனர்.

அடுத்ததாக நடந்த பெண்களுக்கான 25 மீ ரேபிட்-ஃபயர் பிஸ்டல் தகுதிப் போட்டிகள் நடைபெற்றது. அதில் இந்தியாவின் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூவரும் பங்கேற்றனர்.

அவர்கள் சீனாவை முந்தி 3 புள்ளிகள் அதிகமாக பெற்று தங்கம் வென்றனர். சீனா வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றது.

மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் குழு பிரிவில் சிஃப்ட் கவுர் சாம்ரா தங்கம் வென்றார். அவர் உலக சாதனையையும் முறியடித்தார்.

பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் தனிநபர் பிரிவில் ஆஷி சௌக்சி வெண்கலம் வென்றார்.

ஸ்கீட்-50 அணி ஆண்கள் குழு பிரிவில் இந்தியாவின் அனந்த் ஜீத் சிங், குர்ஜோத் சிங் மற்றும் அங்கர் வீர் சிங் பஜ்வா குழுவாக வெண்கலம் வென்றனர். படகோட்டுதல் விளையாட்டில் ஆடவர் டிங்கி ILCA 7ல் விஷ்ணு சரவணன் வெண்கலம் வென்றார்.

இது இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இந்தியா 20 பதக்கம் வென்றுள்ளனர். இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் வென்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா ஆறாம் இடத்தில் உள்ளது.

சீனா 109 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், ரிபப்ளிக் ஆஃப் கொரியா 54 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஜப்பான் 51 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Story first published: Wednesday, September 27, 2023, 9:17 [IST]
Other articles published on Sep 27, 2023
English summary
India's medal count going up on september 27 in Asian Games 2023. India got 15th medal after reached second in Shooting women 50m rifle 3 position.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+