Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இருப்பதிலேயே 'அட்டாக்கிங் டீம்' எது தெரியுமா?.. ஐவரி கோஸ்ட்தான்.. எப்படி??

ரியோ டி ஜெனீரோ: ஆச்சு.. உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் ஆரம்பித்து 8 நாட்களாகி விட்டது. இந்த எட்டு நாட்களுக்குள் ஏகப்பட்ட ஆச்சரியங்களைப் பார்த்து விட்டனர் ரசிகர்கள்.

புதிய சாதனைகள், வியத்தகு கோல்கள், வீரர்களின் சாகசங்கள், எதிர்பாராத சொதப்பல்கள் என்று ரசிகர்களின் அத்தனை எதிர்பார்ப்புக்கும் நல்ல தீனி போட்டு வருகிறது நடப்பு உலகக் கோப்பைப் போட்டித் தொடர்.

இந்த எட்டு நாட்களில் நடந்த சில சுவாரஸ்யங்களின் சின்னத் தொகுப்பு இது...

இதுவரை 23 போட்டிகள்

இதுவரை 23 போட்டிகள்

மொத்தம் 64 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுவரை 23 போட்டிகள் நடந்து முடிந்து விட்டன. அதாவது ஜூன் 19ம் தேதி வரை கணக்கு இது.

63 கோல்கள்

63 கோல்கள்

இதுவரை மொத்தம் 63 கோல்கள் போடப்பட்டுள்ளன.

அதி விரைவான கோல்

அதி விரைவான கோல்

நடப்பு தொடரின் அதி விரைவான கோல் என்ற பெருமையை அமெரிக்காவின் கிளிண்ட் டெம்ப்சி வைத்துள்ளார். அதாவது போட்டி தொடங்கிய 29வது விநாடியில் கோலடித்து இந்த சாதனையை அவர் படைத்தார்.

கோல் சதவீதம்

கோல் சதவீதம்

இதுவரை நடந்த போட்டிகளில் ஒரு போட்டிக்கு 2.9 என்ற சதவீதத்தில் கோல்கள் போடப்பட்டுள்ளன.

5 ரெட் கார்ட்

5 ரெட் கார்ட்

இதுவரை 5 வீரர்கள் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் - போர்ச்சுகல் அணியின் பெபே, காமரூனின் அலெக்சாண்ட்ரே சாங், உருகுவேயின் மேக்ஸிமிலனோ பெரைரா, ஹோண்டுராஸின் வில்சன் பாலசியாஸ், கிரீஸின் கான்ஸ்டான்டினோஸ் கட்சோரானிஸ் ஆகியோர்.

டாப் ரன்னர்

டாப் ரன்னர்

உருகுவே அணியின் ஆல்வரோ பெரைராதான் அதிகம் ஓடியவர் . அதாவது மொத்தம் 9078 மீட்டர் தொலைவுக்கு அவர் ஓடியுள்ளார்.

அதிக கோல்கள்

அதிக கோல்கள்

தலா 3 கோல்கள் போட்டு ஜெர்மனியின் தாமஸ் முல்லர், நெதர்லாந்தின் அர்ஜென் ராபன், ராபின் வான் பெர்ஸி ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.

செம பாஸ்….

செம பாஸ்….

அதிக அளவிலான பாஸ்களை மேற்கொண்டவர் ஜப்பானின் ஹோடரு யமகுச்சி. மொத்தம் 129 பாஸ்களை இவர் கொடுத்துள்ளார்.

செம சேவ்

செம சேவ்

சிலியின் கிளாடியோ பிராவோ 9 சேவ்களை செய்துள்ளார்.

அதிகம் கோல் அடித்த நெதர்லாந்து

அதிகம் கோல் அடித்த நெதர்லாந்து

அதிக அளவிலான கோல் அடித்த அணி நெதர்லாந்துதான். மொத்தம் 8 கோல்களை அது 2 போட்டிகளில் அடித்துள்ளது.

சிறந்த அட்டாக்கிங் அணி

சிறந்த அட்டாக்கிங் அணி

ஐவரி கோஸ்ட்தான் சிறந்த அட்டாக்கிங் அணியாக உருவெடுத்துள்ளது. 3 கோல்கள் அடித்தும், 10 ஷாட்களைத் தடுத்தும், 8 ஷாட்களைக் காப்பாற்றியும், 13 கோல் முயற்சிகளை மேற்கொண்டும் அதிரிபுதிரியாக ஆடியுள்ளது.

Story first published: Friday, June 20, 2014, 17:04 [IST]
Other articles published on Jun 20, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+