Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா சார்பில் 524 வீரர்-வீராங்கனைகள் ஏசியன் கேம்ஸ் 2018இல் பங்கேற்பு

ஜகார்தா: இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் 277 வீரர்கள் மற்றும் 247 வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2 வரை, இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் 277 வீரர்கள் மற்றும் 247 வீராங்கனைகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் பலம்பெங் நகரங்களில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தியாவின் சார்பில் பங்கேற்க ஏராளமான வீரர்கள் பரிசீலிக்கப்பட்டு, தற்போது இறுதியாக 524 வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மொத்தம் 36 வகையான விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர்.

தடகளப் போட்டிகள்

தடகளப் போட்டிகள்

இதில், தடகள விளையாட்டில் பங்கேற்பவர்களே அதிகம். மொத்தம் 52 பேர் தடகளத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதை தவிர்த்து, பின் வரும் விளையாட்டுகளில் பங்கேற்கவும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மற்ற பிரிவுகள்

மற்ற பிரிவுகள்

வில்வித்தை, பாட்மிண்டன், கூடைப்பந்து, குத்துச்சண்டை, பௌலிங், கேனோ-காயக் (ஸ்ப்ரின்ட்), கேனோ-காயக் (ஸ்லாலோம்), சைக்ளிங், ஈகுவேஸ்டரியன், பென்சிங், ஜிம்னாஸ்டிக்ஸ், கோல்ப், கைப்பந்து ஹாக்கி, ஜூடோ, கபடி, கராத்தே, பென்சாக் சிலாட், ரோலர் ஸ்கேட்டிங், ரோவிங், செய்லிங், சம்போ, செபக்டக்ரா, ஷூட்டிங், ஸ்குவாஷ், ஸ்விம்மிங், டைவிங், டென்னிஸ், தேக்வாண்டோ, ட்ரையாத்லான், சாப்ட் டென்னிஸ், டேபிள் டென்னிஸ், வாலிபால், பளுதூக்குதல், மல்யுத்தம், மற்றும் வுஷு. (இத்தனை விளையாட்டா இருக்கு? என நீங்கள் கேட்பது தெரிகிறது).

தகுதிகள் அடிப்படையில்

தகுதிகள் அடிப்படையில்

கடந்த ஜூன் 2018இல், இந்திய ஒலிம்பிக் சங்கம், சுமார் 2370 வீரர்களின் பட்டியலை விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பியது. அதிலிருந்து, ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனிப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் 524 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது ஒருபுறமிருக்க, இந்திய கால்பந்து அணி இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில்பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

கால்பந்து மட்டும் இல்லை

கால்பந்து மட்டும் இல்லை

இந்திய ஒலிம்பிக் சங்கம், தனது தேர்வு செய்யும் தகுதிகளின் அடிப்படையில், இந்திய கால்பந்து அணியை அனுப்புவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. இதற்கு, அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIIF) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இந்திய கால்பந்து அணி நல்ல முன்னேற்றத்தை சந்தித்துள்ளது. அவர்களுக்கு ஆசிய விளையாட்டு போன்ற பெரிய தொடர்களில், மற்ற நாடுகளோடு ஆடும் வாய்ப்பை பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியா சாதிக்குமா

இந்தியா சாதிக்குமா

விளையாட்டு போட்டிகளை பொறுத்தவரை, இந்தியா மற்ற வளரும் நாடுகளைவிட சற்று பின்தங்கி உள்ளதாக கருதப்படும் நிலையில், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் அந்த நிலையை மாற்றுவார்களா? என பார்ப்போம்.

Story first published: Wednesday, July 18, 2018, 12:20 [IST]
Other articles published on Jul 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+