For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா கண்ணு கொள்ளிக் கண்ணா இருக்கும்போலயே.. ஒலிம்பிக் போட்டியும் போண்டியாகுமா?

டோக்கியோ : வரும் ஜூலை 24ம் தேதி டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டிகள் 2020 நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

Tokyo Olympics 2020 | Olympics may be cancelled due to corono

திட்டமிட்டப்படி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான தகுதி போட்டிகளும் உலக அளவில் ஆங்காங்கே நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் ஒலிம்பிக்கையும் விட்டு வைக்கவில்லை.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 6,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாளை கூடவுள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து சர்வதேச விளையாட்டு நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

அச்சத்தில் உலக மக்கள்

அச்சத்தில் உலக மக்கள்

சர்வதேச அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இதுவரை பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சர்வதேச அளவில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

விளையாட்டு நிகழ்வுகள் ரத்து

விளையாட்டு நிகழ்வுகள் ரத்து

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலும் ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விளையாட்டு நிகழ்வுகள் ரத்து

விளையாட்டு நிகழ்வுகள் ரத்து

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலும் ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜூலை 24ம் தேதி துவக்க திட்டம்

ஜூலை 24ம் தேதி துவக்க திட்டம்

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020 தொடரை வரும் ஜூலை 24ம் தேதி நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதையடுத்து பல்வேறு பிரிவுகளுக்கான விளையாட்டுகளின் தகுதி சுற்றுகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு, தகுதி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உறுதியில் தடுமாறும் ஒலிம்பிக் கமிட்டி

உறுதியில் தடுமாறும் ஒலிம்பிக் கமிட்டி

ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திட்டவட்டமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது, கொரோனாவின் பாதிப்பு தீவிரமாக உள்ளதையடுத்து, அதன் முடிவில் மாற்றம் ஏற்படலாம் என்று தெரிகிறது. நாளை நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து சர்வதேச விளையாட்டு நிறுவனங்களுடன் ஒலிம்பிக் கமிட்டி ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

69% பேர் மறுப்பு

69% பேர் மறுப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து தொலைபேசி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 69 சதவிகிதம் பேர், நடத்த மறுப்பு தெரிவித்து ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து போட்டிகளை நடத்த உறுதியாக இருந்த ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர், இந்த போட்டிகளை நடத்துவது குறித்து தற்போது ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

Story first published: Monday, March 16, 2020, 18:23 [IST]
Other articles published on Mar 16, 2020
English summary
The International Olympic Committee plans to hold Emergency Talks
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+