For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹா..ஹா.. வக்கார் யூனிஸ்க்கு செம நோஸ் கட்.. இர்பான் பதான் கொடுத்த தரமான பதிலடி

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாயின் ஷா ஆஃப்ரிடி காயம் காரணமாக விலகியுள்ளார்.

Recommended Video

Asia Cup 2022: Select ஆகாத Deserved Players| Aanee's Appeal | *Cricket

இதனால் பாகிஸ்தான் அணி ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில், இந்திய வீரர்களையும், ரசிகர்களையும் வம்பிழுக்கும் வகையில் வக்கார் யூனிஸ் பேசினார்.

அதில், ஷாயின் ஷா ஆஃப்ரிடிக்கு ஏற்பட்டுள்ள காயம், இந்திய அணியின் முன்வரிசை வீரர்களுக்கு மிகப் பெரிய நிம்மதியை கொடுத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கேகேஆர் அணி எனக்கு பணம் தர வேண்டும்.. இர்பான் பதான் போட்ட அதிர்ச்சி டிவீட்.. என்ன நடந்தது?கேகேஆர் அணி எனக்கு பணம் தர வேண்டும்.. இர்பான் பதான் போட்ட அதிர்ச்சி டிவீட்.. என்ன நடந்தது?

ரசிகர்கள் எதிர்ப்பு

ரசிகர்கள் எதிர்ப்பு

கடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் ரோகித், சர்மா,கேஎல் ராகுல் விக்கெட்டை ஷாயின் ஷா ஆஃப்ரிடி வீழ்த்தியதால், இப்படி ஒரு கருத்தை அவர் கூறினார். பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிசின் இந்த பேச்சுக்கு இந்திய ரசிகர்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

இர்பான் பதிலடி

இர்பான் பதிலடி

இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் இர்பான் பதான், தற்போது வக்கார் யூனிஸ்க்கு தக்க பதிலடி தந்தள்ளார். அதில் இந்திய அணியில் பும்ரா, ஹர்சல் பட்டேல் ஆகியோர் இல்லாதது, மற்ற அணிகளுக்கு நிம்மதியை தரும் என்று பதிவிட்டுள்ளார். பும்ரா தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் தவைசிறந்த வீரராக விளங்கி வருவதை நாசுக்காக குறிப்பிட்டு பதான் பதிவிட்டுள்ளார்.

கிளின் போல்ட்

கிளின் போல்ட்

இர்பான் பதானின் இந்த பதிலை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2007 டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதில் பதான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் வசீம் ஜாபர் தான் இப்படி பதிலடி தருவார். தற்போது இர்பான் பதான் யாக்கர் பந்து போல் வீசி யூனிசை கிளின் போல்ட் ஆக்கி விட்டார்.

பின்னணி என்ன?

பின்னணி என்ன?

உலககோப்பையில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான், தற்போது ஆசிய கோப்பை தொடரை முன்னிட்டு இந்திய வீரர்களை வம்பிழுத்து உளவியல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது அப்பபட்டமாக தெரிகிறது. இதனால், ரோகித், ராகுல், கோலி, சூர்யகுமார் போன்ற வீரர்கள் தங்களது பேட் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி தர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தானுடன் வரும் 28ஆம் தேதி எதிர்கொள்கிறது.

Story first published: Sunday, August 21, 2022, 20:31 [IST]
Other articles published on Aug 21, 2022
English summary
Irfan Pathan Befitting Reply to Waqar younis ahead of Asia cup 2022.. வக்கார் யூனிஸ்க்கு செம நோஸ் கட்.. இர்பான் பதான் கொடுத்த தரமான பதிலடி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X