திடீரென பயணத்தை ரத்து செய்த தோனி??.. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஏமாற்றம்.. காரணம் என்ன?
சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கலந்துக்கொள்ளவிருந்த எம்.எஸ்.தோனி கடைசி நேரத்தில் ஏமாற்றியுள்ளார்.
சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன.
கடந்த ஜூலை 28ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதலிடத்தை பிடிக்கப்போகும் அணி எதுவென்று இன்று தெரிந்துவிடும்.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு வழா
செஸ் ஒலிம்பியாட்டிற்காக சென்னை நேரு அரங்கத்தில் இன்று நிறைவு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற தொடக்கவிழாவை போன்றே நிறைவு விழாவையும் கோலாகலமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனையும் இயக்குநர் விக்னேஷ் ஷிவன் தான் இயக்கவுள்ளார்.

தோனி பங்கேற்பு
இந்த நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்க, சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி கலந்துக்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்காக 300க்கும் மேற்பட்ட கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடைசி நேரத்தில் எம்.எஸ்.தோனி பங்கேற்கபோவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

காரணம் என்ன
தோனி தற்போது அமெரிக்காவில் தனது தனிப்பட்ட பணிகளுக்காக சென்றுள்ளதாக தெரிகிறது. அங்கிருந்து அவர் இன்று காலையே நேரடியாக சென்னை கிளம்பி வரவேண்டியிருந்தது. ஆனால் திடீரென அவர் புறப்பாடு தாமதமாகியுள்ளதால், அவரின் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் பதக்கங்கள் மற்றும் இதர பரிசுகளை வழங்கி கவுரவிக்கவுள்ளார். இதன்பின்னர் அனைத்து வீரர், வீராங்கனைகளும் மிகவும் பாதுகாப்பாக தங்களது தாயகம் திரும்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications