ஐபிஎல் - இன்று ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் மோதல்
அகமதாபாத்: இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தற்போதைய சாம்பியன் டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் அணியும், முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன.
முதல் ஐபிஎல் தொடரில் சாம்பியன் ஆன அணி ஷான் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் அணி. கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி கில்கிறைஸ்ட் தலைமையிலான ஹைதராபாத் அணி.
இரு தொடர் வெற்றிகளுடன் களத்தில் இறங்குகிறது ராஜஸ்தான். அதேசமயம் டெக்கான் சார்ஜர்ஸும் நிறைய நம்பிக்கையுடன் உள்ளது. முதல் போட்டியில் இந்த அணி கொல்கத்தாவிடம் தோற்றது. ஆனால் அடுத்து வந்த 3 போட்டிகளிலும் வென்று படு தெம்பாக காணப்படுகிறது.
டெக்கான் அணியின் முக்கிய வீரரான சைமண்ட்ஸ் நல்ல பார்மில் இருக்கிறார். அதேபோல ராஜஸ்தான் அணியிலும் யூசுப் பதான் போன்ற அதிரடி மன்னர்கள் உள்ளனர். இதனால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என நம்பலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:36 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications